"என் பொண்ணுக்கு மட்டும் ஓட்டு போட்டுடாதீங்க, வந்தா ஒன்னுமே செய்ய மாட்டா" என்று அறைகூவல் விடுக்கும் தி.மு.க ஆலங்குளம் வேட்பாளர் பூங்கோதையின் தாயார்!
By : Mohan Raj
ஒரு கட்சியின் வேட்பாளருக்கு எதிர்ககட்சியினர் வாக்களிக்க வேண்டாம் என எதிர் பிரச்சாரம் செய்வார்கள், இல்லை அவர் வந்தால் ஊழல் அதிகமாகிவிடும் என மக்கள் வாக்களிக்க வேண்டாம் என எதிர் பிரச்சாரம் செய்வார்கள். ஏன் அந்த வேட்பாளர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கூட அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என எதிர் பிரச்சாரம் செய்வார்கள் ஆனால் ஒரு வேட்பாளரின் தாயாரே தன் மகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என எதிர்பிரச்சாரம் செய்வது வரலாற்றில் இதுவே முதல்முறை.
அந்தவகையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி தி.மு.க வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என வேட்பாளரின் தாயாரே வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா போட்டியிடுகிறார். இந்த நிலையில் "தன் மகளுக்கு வாக்களிக்க வேண்டாம்" என்று பூங்கோதை'யின் தாயார் கமலா பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், "தனது கனவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பூங்கோதை நடந்துகொண்டிருப்பதாக அவரது தாயார் கமலா தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபற்றி அவரது தாயார் கூறியது, "நான் சாமியெல்லாம் வேண்டிக்கொள்வது பூங்கோதை வெற்றி பெற்று விடக்கூடாது என்றே" என அவர் தெரிவித்தார்.
மேலும் கூறிய அவர், "தி.மு.க வேட்பாளர் பூங்கோதை நிறைய சொத்துக்களை வளைத்து போட்டிருப்பதகவும், அவர் வந்தால் ஆலங்குளம் தொகுதிக்கு ஒன்றுமே செய்யமாட்டார்" எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து தி.மு.க'வினர் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.