உண்மையை வெளியிட்டதற்காக வயிற்றெரிச்சலில் செய்தித்தாள்களை கொளுத்தும் திமுகவினர்!
By : Shiva
தி.மு.க. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்று இணைய தளத்தில் பொய் பிரச்சாரம் செய்து வந்த நிலையில் தி.மு.க. செய்த கொடுமைகளை தொகுத்து இன்று காலை வெளியான நாளேடுகளில் 4 பக்க விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உடன்பிறப்புகள் நாளேடுகளை கொளுத்தி தங்களது ஆற்றாமையை தீர்த்து வருகின்றனர்.
தமிழகத்தின் பெயர் தக்ஷிண பிரதேசம் என்று மாற்றப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது என்ற பொய்யான செய்தியை தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பரப்பினர். இதை நன்கு படித்த உடன்பிறப்புகள் கூட ஆராய்ந்து பார்க்காமல் அனைவருக்கும் பகிர்ந்து வந்தனர். ஆனால் இவை பொய்யான பகிரப்பட்ட செய்தி என்று அந்த மீம்சை தயார் செய்தவரே சமூக ஊடகத்தில் அதைப் பற்றி பெருமையாக தம்பட்டம் அடித்து பிறகு நிலைமை தலைகீழானது.
திமுக முழுக்க முழுக்க பொய்களை மட்டுமே கொண்ட கார்ட்டூன் விளம்பரத்தை வெளியிடப்பட்டதைக் கண்டு குதூகலித்த உபிக்கள் இப்போது அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள நான்கு பக்க விளம்பரத்தைப் பார்த்து வயிறெரிவது ஏனோ? இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளில் எதுவுமே கற்பனையில் வெளிவந்தவை இல்லை.
அனைத்துமே பல்வேறு செய்தி தாள்களில் வந்த செய்திகளை தொகுத்து வெளியிடப்பட்ட செய்திகளே ஆகும். இவ்வாறு திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கொடுமைகளைப் பற்றி தொகுக்கப்பட்ட செய்திகளில் நமது கதிர் செய்திகளில் இருந்த வெளியிடப்பட்ட செய்திகளும் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடியை குறித்தும் பாரதிய ஜனதா கட்சியை குறித்தும் அவதூறு பரப்பி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அவர்கள் ஆட்சி செய்யும் போது செய்த கொடுமையின் உண்மையை வெளி கொண்டு வந்ததற்காக உடன்பிறப்புகள் செய்தித்தாள்களை எரித்து வருகின்றனர்.
அவர்கள் செய்தித்தாள்களை மட்டும் தான் அழிக்க முடியுமே தவிர 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை தி.மு.க.வால் மக்கள் பட்ட துன்பத்தை எப்போதும் அழித்துவிட முடியாது.