Kathir News
Begin typing your search above and press return to search.

"சாதிய வன்மம் கொடியது" சொல்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்!

சாதிய வன்மம் கொடியது சொல்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  9 April 2021 5:00 PM IST

"இருவர் சாதிய வன்மத்துடன் கொலை நடந்திருப்பது கண்டனத்திற்குரியது" என தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிக்கையளித்துள்ளார்.

அரக்கோணம் இரட்டைகொலை தொடர்பாக அறிக்கையளித்துள்ள அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் அர்ஜுனன், சூரியா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. சட்டமன்றத் தேர்தல் என்பது ஜனநாயகத்தில் நடைபெறும் ஒரு திருவிழா. அதில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெறுவதும் - ஆக்கபூர்வமான முறையில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்வதும் மட்டுமே ஜனநாயகத்திற்கும், பொது அமைதிக்கும் வலு சேர்க்கும். இந்த நிகழ்வைப் பொறுத்தமட்டில் இப்போது இருவர் சாதிய வன்மத்துடன் கொலை செய்யப்பட்டுள்ள அவலத்தில் முடிந்திருப்பது கண்டனத்திற்குரியது.

கொலை செய்யப்பட்ட இருவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமையும் வரை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எங்கும், யாராலும் பொது அமைதிக்குப் பங்கும் விளைந்து - பொதுமக்களின் நிம்மதியைக் குலைக்கும் நடவடிக்கைகள் அரங்கேற அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News