Kathir News
Begin typing your search above and press return to search.

தி.நகர் தி.மு.க வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனோ - அதிர்ச்சியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின்!

தி.நகர் தி.மு.க வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனோ - அதிர்ச்சியில் தி.மு.க தலைவர்  ஸ்டாலின்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  11 April 2021 11:30 AM IST

தியாகராய நகர் தொகுதி தி.மு.க வேட்பாளரும், மறைந்த ஜெ.அன்பழகனின் தம்பியுமான ஜெ.கருணாநிதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த 6'ம் தேதி ஒரே கட்டமாக தேர்தர் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தனர். இது ஒருபுறம் இருக்கையில் மற்றொரு புறம் கொரோனோ இரண்டாம் கட்ட அலை தமிழகத்தில் முக வேகமாக பரவி வந்தது. இதில் தினமும் 500 என்ற அளவில் இருந்த கொரோனோ தொற்று பாதிப்பு தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் தருவாயில் 5000 என்ற அளவில் பத்து மடங்கு வேகமாக பரவ துவங்கியது.

இதற்கிடையில் கடந்த 6'ம் தேதி தேர்தலும் நடந்து முடிந்த நிலையில் தமிகத்தில் அனைத்து கட்சியின் வேட்பாளர்கள் குறிப்பிட்ட அளவில் கொரோனோ தொற்றிற்கு ஆளாகினர். குறிப்பாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், எம்.பி.கனிமொழி எஎன குறிப்பிடதக்க அனைவருக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் தற்பொழுது ஜெ.அன்பழகனின் தம்பியும் தியாகராய நகர் தொகுதி தி.மு.க வேட்பாளருமான ஜெ.கருணாநிதிக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டது. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், அவருக்கு தொற்று உறுதியானதைடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இவரது அண்ணன் ஜெ.அன்பழகன் சில மாதங்களுக்கு முன் கொரோனோ'வால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News