Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் உடல் அடக்கம் செய்வதற்கு முன்னரே தொகுதிக்கு துண்டு போட்ட காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி - பதவி வெறியில் மனிதாபிமானம் மறந்த காங்கிரஸ்!

ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் உடல் அடக்கம் செய்வதற்கு முன்னரே தொகுதிக்கு துண்டு போட்ட காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி - பதவி வெறியில் மனிதாபிமானம் மறந்த காங்கிரஸ்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  12 April 2021 2:15 AM GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து வரும் மே 2ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கொரோனோ தொற்றால் மரணமடைந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இறந்த மாதவராவ் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னரே "ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால், மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் தான் போட்டியிடுவார்" என மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாதவராவ் என்ற வேட்பாளர் போட்டியிட்டார்.

இரண்டே நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்ததால் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதனைதொடர்ந்து செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் காலமானார்.

கடந்த 6ஆம் தேதி நடந்தத் தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் 73.03 சதவீத வாக்குகள் பதிவாயின. இதனை தொடர்ந்து அந்த தொகுதியின் நிலையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் ஆணையம் சார்பாக எவ்வாறு முடிவெடுக்கப்படும் என நேற்று குறிப்பிட்டார்.

அதில், "மாதவராவ் ஒருவேளை வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அப்படி மாதவராவ் வெற்றி பெறாமல் பிற கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை" எனவும் விளக்கமளித்துள்ளார்.

இதனை கேள்விபட்ட உடனே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அந்த தொகுதிக்கு துண்டு போட்டு வைக்கும் விதமாக "ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால், மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் தான் போட்டியிடுவார்" என அடித்துபிடித்து முன்னரே கூறியது பிற கட்சியினர் மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியினரையே முகம் சுழிக்க வைத்துள்ளது.

ஏனெனில் கடந்த சனிக்கிழமை இறந்த மாதவராவ் உடல் இன்று (திங்கட்கிழமை) காலை தான் இறுதி சடங்கே செய்யப்படுகிறது, அதற்குள் அந்த தொகுதிக்கு முந்திக்கொண்டு முன்பதிவு செய்தது மனிதாபிமானமற்ற செயல் என அனைவரும் கூறி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News