Kathir News
Begin typing your search above and press return to search.

தீவிர சிகிச்சையில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன்!

தீவிர சிகிச்சையில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன்!

Mohan RajBy : Mohan Raj

  |  13 April 2021 10:45 AM GMT

தமிழகத்தில் கொரோனோ இரண்டாம் அலை ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 6ம் தேதி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களையும் கொரோனோ விட்டுவைக்கவில்லை. தி.மு.க துரைமுருகன், அ.தி.மு.க கூட்டணி கட்சி கும்பகோணம் வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார், பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை, தி.மு.க மகளிரணி தலைவி கனிமொழி என முக்கியமான அரசியல் தலைவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதியானது. இவற்றில் எல்லாற்றிற்கும் மேலாக துரதிர்ஷ்ட வசமாக ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனோ தொற்றால் மரணமடைந்தார்.

இவர்களில் முக்கியமாக தி.மு.கவின் பொதுச்செயலாளரும், காட்பாடி வேட்பாளருமான துரைமுருகன் கொரோனோவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார். பின்னர் அந்த சிகிச்சை பலனளிக்காமல் தற்பொழுது சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை அளிக்கப்படுகிறது வருகிறது.

தற்பொழுது கொரோனோ பாதிக்கப்பட்ட வேட்பாளர்களில் துரைமுருகன் வயதில் மூத்தவர் என்பதாலும், அடிக்கடி மருத்துவ காரணங்களுக்காக தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்பவர் என்பதாலும் இவரின் உடல்நிலை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது.

இதனைதொடர்ந்து அவர் உடல்நிலை குறித்து சென்னை குரோம்பேட்டையில் குறித்து ரேலா மருத்துவமனை நிர்வாகம் நேற்று (12/04/21) வெளியிட்டுள்ள குறிப்பில், "தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனின் உடல்நிலை சீராக உள்ளது. கவலைப்படும் வகையில் துரைமுருகன் உடல்நிலை இல்லை; மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து மருத்துவர்கள் 24 மணி நேரமும் அவர் உடல்நிலையை கவனித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவர் வயது மற்றும் உடல்நிலை காரணத்தால் சற்று பயம் கலந்த உணர்வு அரசியல் உலகில் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News