தெலுங்கு புத்தாண்டிற்கு வாய் நிறைய வாழ்த்து கூறிவிட்டு தமிழ் புத்தாண்டிற்கு வழக்கம்போல் கப்சிப்பான ஸ்டாலின்!
By : Mohan Raj
இன்று தமிழகம் முழுவதும் இந்து சமுதாய மக்களால் தமிழ் புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடந்த கால கொரோனோ பாதிப்புகள், இழப்புகள் ஆகியவற்றை இன்று பிறந்துள்ள "ஸ்ரீபிலவ ஆண்டு" கண்டிப்பாக நிவர்த்தி செய்து மக்களுக்கு ஆரோக்கியமான நிம்மதியான வாழ்வை தரும் என மக்கள் தங்களின் இல்லங்களில் தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
ஆனால் தமிழ்நாடே நாங்கதான், நாங்கதான் தமிழ்நாடே என்கிற ரீதியில் ஏகபோகத்திற்கும் விளம்பரம் செய்து வரும் தி.மு.க மட்டும் ஏதோ இந்த தமிழ் புத்தாண்டு பண்டிகையை வேற்று கிரக வாசிகள் கொண்டாடி வருவதை போல் கண்டும் காணாமல் உள்ளனர். பெயரளவில் கூட சிறிது சலனமில்லாமல் உள்ளனர்.
இதே நேற்றைய தெலுங்கு வருடப்பிறப்பு நாளில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவாகட்டும், அறிவாலயத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள அறிக்கைகளாகட்டும் தெலுங்கு மக்களின் புத்தாண்டை செழிப்புடன் கொண்டாட வாழ்த்துக்கள் என்கிற ரீதியில் வாழ்த்துக்கள் நிரம்பி வழிந்தன.
போதாக்குறைக்கு நேற்று மாலை வேறு "அவரவர் மொழிகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் போற்றி பாதுகாத்து, ஆதிக்கத்திற்கு இடமின்றி, அன்பால் இணைந்து சகோதரத்துவம் காத்திடுவோம்" என ஸ்டாலின் யுகாதி வாழ்த்து கூறியதாக மேற்கோள் காட்டி அறிவாலயத்தின் ட்விட்டர் பதிவு பளபளத்தது.
இப்படி "அவரவர் பண்பாடட்டு கூறுகளை போற்றி பாதுகாத்து" என பொய் வசனங்களை கூறி தமிழ் புத்தாண்டிற்கு இந்து சமுதாய மக்களுக்கு வாழ்த்து கூறாமல் இருப்பது யாரை ஏமாற்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களே? இந்துக்கள் பண்பாடு என்றால் இளக்காரம் ஆனால் பண்பாட்டு கூறுகளை போற்றி பாதுகாத்திட வேண்டும் என ஏமாற்றுவது எதற்காக?