Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக அரசுக்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

தமிழக அரசுக்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  16 May 2021 7:15 AM IST

நேற்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்தார். அப்பொழுது நிவாரணமாக ரூ.1 கோடி ரூபாய் ஆளுநர் தமிழக அரசுக்கு அளித்தார்.

கொரோனா 2வது அலையை சமாளிக்கும் விதமாக மே 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று மாலை நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார். கொரோனா பேரிடர் காலத்திற்கு உதவும் விதமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் ஸ்டாலினிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News