Kathir News
Begin typing your search above and press return to search.

தடுப்பூசி சான்றிதழில் மோடி படத்தை நீக்க வழக்கு தொடுத்தவருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு!

தடுப்பூசி சான்றிதழில் மோடி படத்தை நீக்க வழக்கு தொடுத்தவருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு!

Mohan RajBy : Mohan Raj

  |  22 Dec 2021 1:01 AM GMT

கொரோனோ தடுப்பூசி சான்றிதழில் மோடி படத்தை நீக்கக்கோரியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனை அரசியல் லாபத்திற்காக விமர்சன அரசியல் செய்யும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த பீட்டர் மயிலிபரம்பில் என்பவர் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது உரிமை மீறிய செயல் எனக்கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் மீதான அதற்கு மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், "மற்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் அந்தந்த பிரதமர்களின் புகைப்படங்களை அச்சிடுவதில்லை" என தெரிவித்தார். வாதங்களின் இறுதியில் அதற்கு கருத்து தெரிவித்த நீதிபதி, "மற்ற நாடுகளில் எல்லாம் தங்கள் பிரதமரை நினைத்து பெருமைப்படாமல் இருக்கலாம்" என கருத்து தெரிவித்தார்.

பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி, "பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்ற இந்த வழக்கு அரசியல், விளம்பர நோக்கத்திற்காக அற்பமான முறையில் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதற்காக மனுதாரர் பீட்டர் மயலிபரம்பில் 6 வாரத்திற்குள் ரூ. 1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறும் பட்சத்தில் வருவாய் மீட்பு நடவடிக்கைகள் மூலம் அவரது சொத்துக்களில் இருந்து அபராதத்தை வசூலித்துக்கொள்ளலாம்" என தீர்ப்பில் குறிப்பிட்டார்.

மேலும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டும் தீர்ப்பை வழங்கினார்.

Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News