Kathir News
Begin typing your search above and press return to search.

போறபோக்க பார்த்த 1 லட்சம் தாமரை கோடி தமிழ்நாட்டுல பறக்கும் போலருக்கே? இறங்கிய காவிகள், அதிர்ச்சியில் அறிவாலயம்!

போறபோக்க பார்த்த 1 லட்சம் தாமரை கோடி தமிழ்நாட்டுல பறக்கும் போலருக்கே? இறங்கிய காவிகள், அதிர்ச்சியில் அறிவாலயம்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  2 Nov 2023 7:17 AM GMT

தமிழ்நாடு முழுக்க கெத்து காட்டிய பாஜகவினர்! இது ஆரம்பம் தானமே...!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு இருந்த ஏற்றப்படவிருந்த கொடி அகற்றப்பட்டது, அப்பொழுது பாஜகவினர் எங்கள் மாநிலத் தலைவரின் வீட்டில் முன்பு உள்ள கொடிய அகற்ற மாட்டோம் எனக்கூறி அங்கு திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து காவல்துறையினருக்கும், பாஜகவினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிலர் தாக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு அங்கிருந்த கொடிக்கம்பம் அடியோடு அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நவம்பர் ஒன்றாம் தேதி துவங்கி தமிழகத்தின் தினமும் 100 பாஜக கொடி நடப்படும், பத்தாயிரமாவது கொடியை விரைவில் எந்த இடத்தில் கொடியை எடுத்தீர்களோ அதே இடத்தில் மீண்டும் நடுவோம் எனக்கூறி சபதம் எடுத்தார்.

இதனை தொடர்ந்து நவம்பர் ஒன்றாம் தேதி பாஜகவினர் பல இடங்களில் கொடியேற்ற வேண்டும் என ஆயத்தமாகினர், அதன் காரணமாக அண்ணாமலை கூறிய 100 கொடிகளை விட பல நூறு எண்ணிக்கையிலான கொடிகள் முதல் நாளான நவம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் திட்டமிடப்பட்டன.

தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர் என பல இடங்களில் பாஜகவினர் கொடியை நடுவதற்கு ஏற்பாடு செய்து தங்கள் பணிகளை துவக்கினர். ஆனால் அனுமதியில்லாமல் கொடி வைக்க முயன்றதாக கூறி காவல்துறை பாஜகவினரை கைது செய்தது, இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பாஜகவினரும் காவல்துறையினரிடம் ஏன் நீங்கள் தடுக்கிறீர்கள், எங்களை கைது செய்கிறீர்கள்? மற்ற கட்சி கொடிகளின் கம்பம் இருக்க அனுமதி இருக்கிறது எங்கள் கட்சி கொடிகள் வைக்க அனுமதி இல்லையா? எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


இப்படி தொடர்ச்சியாக முதல் தினமே கொடி வைக்க பாஜகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் இது அடுத்தடுத்த தினங்களும் நிகழும் நாங்கள் எங்கள் கொடியை மாநில தலைவர் அண்ணாமலை கூறியது போல் பத்தாயிரம் இடத்தில் நடாமல் விடமாட்டோம் என பாஜகவினர் சபதம் எடுத்துள்ளனர்.


மேலும் ஒற்றை கொடியுடன் போயிருக்கும், இப்பொழுது தமிழக முழுவதும் பாஜக இப்படி களம் இறங்கி விட்டது என திமுக அரசு சற்று அதிர்ச்சியில் இருப்பதாகவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News