நம்பர் ஒன் கட்சி: 10 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக உருவெடுத்த பாஜக!
By : Bharathi Latha
நாடு முழுவதும் பாஜக உறுப்பினராக 10 கோடி பேர்களை சேர்ப்பது என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மேலிடத்தில் இருந்து கட்சித் தொண்டர்கள் வரை அனைவரும் இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் தற்பொழுது பாஜகவில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது என்ற இலக்கு வெற்றி அடைந்து இருக்கிறது.
சமீபத்தில் 'சங்கதன் பர்வா, சதாஸ்யதா அபியான் 2024' வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பாஜக உலகின் மிகப்பெரிய கட்சி மட்டுமல்ல, தனித்துவமான கட்சி, மேலும் மிகவும் ஜனநாயகக் கட்சியும் கூட பாஜகவைப் போல வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும் வேறு எந்தக் கட்சியும் உறுப்பினர் சேர்க்கை நடத்துவதில்லை" என்று அவர் கூறினார். அவர் கூறியது போல் தற்பொழுது பாஜக 10 கோடி உறுப்பினர்களை தாண்டி இருக்கிறது.
அது மட்டும் கிடையாது மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்கள் இது தொடர்பாக கூறும் பொழுது, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், 10 கோடி உறுப்பினர்களை எட்டிய குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இது வெறும் எண் மட்டுமல்ல இது பிரதமர் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் சான்றாகும். மேலும் வளர்ந்த இந்தியா பற்றிய அவரது பார்வையை நனவாக்க அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிமொழி என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Input & Image courtesy: News