Kathir News
Begin typing your search above and press return to search.

திமுகவை படுத்தும் தோல்வி பயம் - 100 பேருக்கு ஒரு ஆள் என திமுக போடும் 'அந்த' செட்டில்மெண்ட் கணக்கு

திமுகவை படுத்தும் தோல்வி பயம் - 100 பேருக்கு ஒரு ஆள் என திமுக போடும் அந்த செட்டில்மெண்ட் கணக்கு
X

Mohan RajBy : Mohan Raj

  |  19 April 2023 7:56 PM IST

தோல்வி பயத்தால் திமுக நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய அதிரடி திட்டம் ஒன்றுடன் களமிறங்க இருக்கிறது.

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணியை வெற்றி பெற்றது அந்த நிலை தற்பொழுது இல்லை, நிலைமை மாறிவிட்டது. தற்பொழுது திமுக தரப்பில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற இடதுசாரி கட்சிகள் இருந்துவருகின்றன. அதே சமயத்தில் எதிர்க்கட்சிகளின் தரப்பில் மிக வலுவாக கூட்டணி அமைந்துள்ளது ஒருபுறம் பாஜக தலைமையிலான கூட்டணி அமைய வேண்டும் என அண்ணாமலை திட்டமிட்டு வருகிறார் எனவே அதன் காரணமாக பாஜக தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய திராவிடர் முற்போக்கு கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற அனைத்து ஒன்றிணைந்து ஒரு கூட்டணியாக அமையும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

மறுபுறம் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என தெரிகிறது. அப்படி அதிமுக தலைமையில் பாஜக அல்லாத கூட்டணி அமைந்தால் அதில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் கூட்டணியில் இருந்து விலகி போய் இணைந்து விடும் என்ற நிலை இருக்கிறது. இந்த நிமிடம் வரை திமுக வரும் நாடாளுமன்ற தேர்தலை பொருத்தமட்டில் பின்னடைவிலேயே உள்ளது, காரணம் திமுக கூட்டணி அமைத்திருக்கும் காங்கிரஸ் வலுவாக இல்லை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் மோடி எதிர்ப்பு என்ற அலையை வைத்து திமுக கூட்டணி ஜெயித்தது ஆனால் தற்பொழுது அந்த மோடி எதிர்ப்பு என்ற அலை இல்லாமலே போய்விட்டது. மேலும் எதிர் தரப்பில் யாரை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என இன்றுவரை குழப்பம் இருந்து வருகிறது. வரும் காலங்களில் கூட இன்னும் அந்த குழப்பம் தீருமா என்ற சந்தேகம் திமுகவிற்கு இருந்து வருகிறது,

மேலும் கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என மற்றவர்கள் அறிவிக்கும் முன்னரே அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் ஆனால் இந்த முறை ராகுல் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் ராகுல் கண்டிப்பாக போட்டியிட முடியாது யாரேனும் ஒரு பொது வேட்பாளரை தான் காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்த வேண்டும், அப்படி பொது வேட்பாளர் யார் என முடிவு செய்யாத நிலையில் காங்கிரஸ் இருந்து வரும் பட்சத்தில் கூட்டணி கட்சிகளான திமுக போன்ற கட்சிகள் குழப்ப நிலையிலேயே நிலையிலேயே இருந்து வருகிறது.

இப்படி 2024 நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரைக்கும் திமுக கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றன. இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 20 முதல் 25 தொகுதிகள் ஆவது வெற்றி பெற்றால் மட்டுமே நமக்கு அடுத்து வரப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அது பேருதவியாக இருக்கும் இல்லையெனில் நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்தித்தால் அதே தோல்வி சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என திமுக நன்கு முடிவு எடுத்து விட்டது. இதற்கு காரணமாக கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை திமுக குறிவைத்து வருகிறது, அந்த நாடாளுமன்ற தேர்தலில் 39க்கு 38 தொகுதிகள் திமுக வெற்றி பெற்ற காரணத்தினால் தான் அதே வெற்றியை வைத்து திமுக முகத்தை மாற்றி 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவால் வெற்றி பெற முடிந்தது.

அதேபோல் தற்பொழுது 2024 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டால் அதே தோல்வி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவிற்கு கண்டிப்பாக எதிரொலிக்கும் எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது திமுக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளது.

அந்த வகையில் ஆளும் கட்சியான தி.மு.க. தேர்தல் முன்னேற்பாடுகளை துவக்கி உள்ளது. மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வாயிலாக உறுப்பினர் சேர்க்கை பூத் கமிட்டி முகவர்கள் நியமனம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுகுறித்து தேர்தல் பார்வையாளர்களுடன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். தி.மு.க. வில் தற்போது ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இதை இரண்டு கோடி உறுப்பினர்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு பூத்திற்கும் 10 முகவர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி ஒவ்வொரு பூத் ஏஜன்டும் அந்த பகுதியில் உள்ள 100 வாக்காளர்களை கவனிக்கும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது. இவர்கள் லோக்சபா தேர்தல் வரை தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்களை அடிக்கடி சந்தித்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

தி.மு.க. ஆதரவாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் பொறுப்பாளர்கள் ஏப். 27ம் தேதிக்குள் பூத் முகவர்கள் பட்டியலை ஒப்படைக்க வேண்டும். புதிய உறுப்பினர் சேர்ப்பு பணிகளை ஜூன் 3க்குள் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இப்படி திமுக 100 பேருக்கு ஒரு ஆள் என்கின்ற ரீதியில் பூத்துகளில் ஆட்களை இறக்க இருக்கிறது அவ்வாறு பூத்துகளில் ஆட்களை இறக்கும் பட்சத்தில் தேர்தல் பணி மட்டும் அல்லாது இதர பணிகளுக்கும் அவர்களை திமுக உபயோகப்படுத்த நினைக்கிறது. குறிப்பாக தேர்தல் நேரங்களில் வழங்கப்படும் ஒரு சில கவர்ச்சி பொருள்களாகட்டும், மேலும் தேர்தல் சமயங்களில் யார் யாரெல்லாம் திமுகவிற்கு வாக்களிக்கிறார்கள் என்கின்ற கணக்கெடுப்புகளாகட்டும் இது போன்ற விஷயங்களுக்கு திமுக தற்பொழுது ஆட்களை தயார் செய்து வருகிறது ஒருபுறம் தோல்வி உறுதியாகிவிட்டது ஆனால் மறுபடியும் அந்த தோல்வியை சமாளிக்க ஏதாவது செய்தாக வேண்டும் ஆளுங்கட்சியாக வேற இருக்கிறோம் இப்பொழுது தோற்றால் மக்கள் மத்தியில் இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் எனவே இந்த தேர்தலில் தோற்க கூடாது என இந்த பூத் வேளைகளில் இறங்கியுள்ளது திமுக தலைமை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News