Kathir News
Begin typing your search above and press return to search.

இதுவரை 1000 மாணவர்கள் மீது வழக்கு - மாணவர்கள் போராட்டத்தை அதிகாரத்தால் அடக்க துடிக்கும் தி.மு.க !

இதுவரை 1000 மாணவர்கள் மீது வழக்கு - மாணவர்கள் போராட்டத்தை அதிகாரத்தால் அடக்க துடிக்கும் தி.மு.க !

Mohan RajBy : Mohan Raj

  |  18 Nov 2021 7:15 AM GMT

நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற கல்லூரி மாணவர்கள் மீது இதுவரை 1000 பேரின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த போது கல்லூரிகள் மூடப்பட்டு முழுமையாக ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட மற்ற படிப்புகளில் தேர்வுகளானது ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அனைத்து தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் என்று கல்லூரிகள் அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வு நடத்த வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் குறிப்பாக மதுரை காமராஜர் பல்கலை கழகம், அமெரிக்கன் கல்லூரி, யாதவர் கல்லூரி, மன்னர் திருமலை கல்லூரி, மதுரைக்கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரியிலிருந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆன்லைன் தேர்வை நடத்தகோரி பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை கலைந்து செல்லமாட்டோம் எனக்கூறி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மதுரையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் போராட்டம் நடத்திய 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மேலும் 300 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுவரை ஆளும் தி.மு.க அரசு அமைதி வழியில் போராடிய மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தவில்லை மாறாக படிக்கும் மாணவர்களை வழக்கு போட்டு அடக்கி வருகிறது. வழக்கை சந்திக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற யோசனை கூட இன்றி தி.மு.க இந்த அராஜக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.



Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News