டெல்லி சத்தீஸ்கர் வரிசையில் இணைய போகும் தமிழக அரசு:மதுபான ஊழல் மூலம் ரூபாய் 1000 கோடி கருப்பு பணம்!

திமுகவிற்கு தமிழகத்தில் நடந்து வரும் மதுபான ஊழல் மூலம் ரூபாய் ஆயிரம் கோடி கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளதாக தூத்துக்குடியில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
டெல்லி மற்றும் சத்தீஸ்கரில் மதுபான ஊழல் அம்மாநிலத்தின் அரசுகளை ஆட்டி ஆட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டது அந்த வரிசையில் தற்போது சென்னை மதுபான ஊழல் தொடங்கியுள்ளது இந்த ஊழலில் தான் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் திமுகவிற்கு கருப்பு பணத்தை மாற்றியுள்ளனர் திமுக தன் கட்சிக்கு செய்ய வேண்டிய பணிகளை இந்த பணத்தின் மூலம் தான் செய்து வருகிறது தனியாக எடுக்கப்பட்ட மதுபானத்திற்கு எந்தவித வரியும் இல்லாமல் பணம் எடுக்கப்பட்டு 2024 திமுக தேர்தல் செலவுக்கு பயன்படுத்தப்பட்டது
2026 தேர்தல் செலவிற்காக அனைத்து தொகுதிகளிலும் பணம் பதுக்கப்பட்டு மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு அந்த பணத்தை பயன்படுத்துகிறார்கள் டாஸ்மாக் நிறுவனமும் மதுபான ஆலைகளும் ஒன்றாக இணைந்து தமிழக மதுபான கொள்கைகளை முடிவு செய்கின்றனர் என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்