மது ஆலை நிறுவனங்களுக்கும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும் இடையே நிலவி வந்த நெருக்கம்:இ.டி.சோதனையில் வெளிவந்த 1000 கோடி ரூபாய் ஊழல்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது ஆலை நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையை நடத்தியது இந்த சோதனையின் திமுகவைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளின் இடங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது சோதனைகளின் முடிவில் பல முக்கியமான ஆவணங்கள் கணக்கில் வராத 50 லட்சம் ரூபாய் ஏராளமான டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பாக முறைகேடு புகாரில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது
இந்த நிலையில் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் டாஸ்மாக் தொடர்புடைய போக்குவரத்து டென்டரில் கேஒய்சி மற்றும் டிடி தரவுகள் ஒத்துப் போகவில்லை என்றும் பாரின் உரிமங்களை பெறுவதற்காக டென்டரில் ஜிஎஸ்டி பான் நம்பர் இல்லை என்றும் தெரிவித்துள்ளது
மேலும் டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு வழக்கில் ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்குவதாகவும் அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது அதுமட்டுமின்றி ஒரு பாட்டலுக்கு எம்ஆர்பி தொகையை விட பத்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதும் மது ஆலை நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் உயர் அதிகாரிகள் இடையே நெருங்கி தொடர்பு இருந்து வந்ததும் செலவுகளை ஊதி பெருக்கி ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதும் அமலாக்க துறையின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது