Kathir News
Begin typing your search above and press return to search.

முதல்வருக்கு லீவு குடுங்கன்னு வழக்கு தொடுத்தவருக்கு ₹10,000 அபராதம் - நீதிமன்றம் அதிரடி!

முதல்வருக்கு லீவு குடுங்கன்னு வழக்கு தொடுத்தவருக்கு ₹10,000 அபராதம் - நீதிமன்றம் அதிரடி!
X

Mohan RajBy : Mohan Raj

  |  8 Jun 2021 1:15 PM IST

முதல்வர் ஸ்டாலினை ஞாயிற்றுக் கிழமைகளில் தொந்தரவு செய்யக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தவருக்கு ₹10,000 அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னையை சேர்ந்த விவேகானந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசித்திர பொது பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, "முதல்வர் தனது உடல் நிலையை கருத்தி கொள்ளாமல், கடந்த மே 30-ஆம் தேதி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பி.பி.இ கிட் அணிந்து ஆய்வு செய்தார்" என்றும், மக்கள் நலனில் முதல்வருக்கு அக்கறை இருப்பது போலவே, முதலமைச்சரின் நலனிலும் அனைவருக்கும் அக்கறை உள்ளது. முதல்வர் ஸ்டாலினை அசாதாரண சூழ்நிலையை தவிர ஞாயிற்றுக் கிழமைகளில் தொந்தரவு செய்யக் கூடாது என தலைமை செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்" என முதல்வருக்கு விடுமுறை கேட்டு விசித்திரமாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த விசித்திர பொதுநல வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது "அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டுமென உத்தரவிட முடியாது" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும் இதுபோன்ற விசித்திர வழக்கை போட்டு நீதிமன்ற நேரத்தை வீணடித்ததால் மனுதாரருக்கு ₹10,000/- அபராதம் விதித்து உத்தரவிட்டனர். மேலும், நீதிமன்றத்தில் அனுமதி பெறாமல் ஓராண்டிற்கு பொதுநல வழக்கு தொடர தடை விதித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News