Kathir News
Begin typing your search above and press return to search.

சம்பளம் சரியா வரல அதான் பக்தர்களிடம் 100,200 வசூலிக்கிறோம் - மேல்மலையனூர் கோவில் அறநிலையத்துறை பராமரிப்பின் லட்சணம்

சம்பளம் சரியா வரல அதான் பக்தர்களிடம் 100,200 வசூலிக்கிறோம் - மேல்மலையனூர் கோவில் அறநிலையத்துறை பராமரிப்பின் லட்சணம்
X

Mohan RajBy : Mohan Raj

  |  15 March 2022 7:45 PM IST

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களிடமிருந்து வசூல் வேட்டை நடத்துவது பக்தர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.


அங்காளம்மன் கோவிலில் ஒரு நுழைவு வாயில் உள்ளது இந்த நுழைவு வாயிலில் சிறப்பு தரிசனத்திற்காக 50 முதல் 200 வரையிலான கட்டணங்கள் உள்ளன, இது இல்லாமல் ஒரு பொது நுழைவு வாயில் ஒன்று அங்காளம்மன் கோவிலில் உள்ளது இது கட்டணமில்லா தரிசனத்திற்காக உள்ளது.


கட்டணமில்லா தரிசன வரிசையும் 50 முதல் 200 ரூபாய் சிறப்பு நுழைவுச்சீட்டு கொண்ட வரிசையும் ஒரே இடத்தில் பொதுவாக சந்திக்கும் அந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் இதனைப் பயன்படுத்தி அங்கு வசூல் வேட்டை நடைபெற்று வருவதாக பலர் புகார் அளித்துள்ளனர். அவர்கள் கூறும்போது சன்னதிக்கு நுழைய அர்ச்சகர்கள் தலா 100 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் செலுத்தாதவர்கள் உடனடியாக பிரார்த்தனை மண்டபத்தை விட்டு வெளியேறி மாறுபட்ட ஏற்படுவதாக கூறுகின்றனர் ஆனால் வசூல் செய்யும் பணத்திற்கு முறையான சீட்டு போன்ற எதுவும் வழங்கப்படுவதில்லை.


இதுகுறித்து விழுப்புரத்தை சேர்ந்த 45 வயதான ஒரு நபர் கூறுகையில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இந்த கோவில் செயல்பட்டாலும் வசூலான தொகை கணக்கு காட்டவில்லை விதிமுறைகளின்படி கோவிலில் குறைந்தபட்சம் உள்ள தொகையை வசூலிக்க வேண்டும் ஆனால் அந்த தொகை வசூலிக்க வசூலிப்பதற்காக ரசீது ஏதும் வழங்கப்படாமல் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.


மேலும் இது குறித்து செஞ்சியை சேர்ந்த பொறியாளர் கே.பிரதீப் கூறுகையில் சன்னதியை விட்டு வெளியேறும் பல பக்தர்கள் தொகையை செலுத்தத் தவறியதால் அவமானம் மற்றும் விரக்திக்கு ஆளாகின்றனர், அந்தளவிற்கு சன்னதியில் உள்ளவர்கள் நடத்துகின்றனர். தனது குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும் பொழுது அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு நாம் ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என விரக்தி அடைந்துளளார்.


கோவில் வளாகத்தில் உள்ள இந்து சமய அறநிலை துறை அலுவலகத்தை அணுகி கேட்டபோது அவர்கள் கூறியதாவது, 'அர்ச்சகர்களுக்கு சம்மந்தப்பட்ட துறையால் சம்பளம் சரியாக வழங்கப்படவில்லை எனவும் , அதனை ஈடுகட்ட அவர்கள் மக்களிடம் இருந்து தொகை வசூலிக்கின்றனர்' எனவும் கூறினார். மேலும் இதுகுறித்து அவர்கள் எந்த தகவலும் தெரிவிக்காமல் அமைதியாக சென்றனர்.


Source - new indian express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News