தமிழக மக்களுக்கு மோடியின் பொங்கல் பரிசாக 11 மருத்துவ கல்லூரிகள் - அடுத்த மாதம் திறப்புவிழா !

கடந்த ஆண்டு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளை தமிழக மக்களுக்கு பயன்பாட்டிற்கு திறக்க பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார்.
கடந்த ஆண்டு மத்திய அரசு நாட்டு மக்களுக்காக 75 புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க ஏற்பாடு செய்தது. அதில் 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டன. அப்போதைய ஆளும் அ.தி.மு.க அரசு அந்த மருத்துவ கல்லூரிகளை திருவள்ளூர், அரியலூர் கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவ கல்லூரி வீதம் 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கான பணிகளை துவக்கி வைத்தது.
அந்த ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 150 மாணவர்கள் வீதம் 1,650 மாணவர்களை சேர்ப்பதற்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி இருக்கிறது. அனைத்து கல்லூரிகளும் தற்பொழுது திறப்பதற்கு தயார் ஆகிவிட்டன.
அடுத்த ஜனவரி மாதம் 12'ம் தேதி பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்கி வைக்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து காரில் விருதுநகர் செல்கிறார். பொங்கல் பரிசாக தமிழக மக்களுக்கு 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி வழங்க இருக்கிறார். பிரதமர் மோடியுடன் அந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கிறார்.