மதுரையில் 120 ஆண்டுகால பழமையான மேலமடை சாவடி இடிப்பு.. இந்து முன்னணி கடும் எதிர்ப்பு..
By : Bharathi Latha
மதுரையில் தற்பொழுது 120 ஆண்டுகால மேலமடை சாவடி இடித்து தள்ளப்பட்டு இருக்கிறது. இதற்கு இந்து முன்னணியினர் தங்களுடைய கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து இருக்கிறார்கள். தற்போது தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசு தமிழர்களின் கலாச்சாரங்களுடன் ஒன்றிணைந்த பாரம்பரிய சின்னங்களை அழிக்கும் முயற்சியில், இந்த நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
இது குறித்து அவர்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கருத்துக்களை பதிவிடும் பொழுது,"திராவிட மாடல் நாத்திக அரசுக்கு தெரியுமா? தமிழர்களின் வாழ்வியல் பண்பாடு என்கின்ற கற்பூர வாசனை! 120 ஆண்டுகால மேலமடை சாவடி இடித்து தள்ளப்பட்டுள்ளது. நூற்றாண்டு கால பாரம்பரிய சின்னங்களை அழிக்கக்கூடாது என்கின்ற விதி நடைமுறையில் இருக்க, சேதுபதி ராஜா காலத்து மண்டபத்தை தற்போதைய நாத்திக அரசு இடித்து தள்ளிய சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை இடித்ததற்கு சமமாகும்.
இந்த மண்டபம் பொது மக்களுக்கு பெரிதும் பயன்பட்டு வந்துள்ளது. அழகர் ஆற்றில் இறங்கும் மிகப்பெரிய திருவிழாவிற்கு இந்த மண்டபமும் ஒரு சாட்சியாகும். மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால் உள்ளிட்டவை மதுரையின் வரலாற்று சின்னம் என்றால், மேலமடை சாவடியும், புளியமரத்து பெருமாள் கோயிலும், படித்துறை ஆலமரமும் மேலமடையின் வரலாற்று அடையாளங்கள் இல்லையா? என்று மதுரை மக்களும் பண்பாட்டு ஆதரவாளர்களும் இந்த இந்து சமய பண்பாட்டை அழிக்க நினைக்கும் நாத்திக அரசை கேள்வி கேட்கிறார்கள். இதுபோன்று தொடர்ந்து பாரம்பரியத்தை பழங்கால சின்னத்தை சட்டத்தை மீறி அழிக்க நினைத்தால் இந்து முன்னணி மூலம் சட்டப்படி இந்த அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர்கள் கூறி இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News