Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. ஆட்சியில் 130 கோயில்கள் இடிப்பு என ட்விட்டரில் பதிவு: பா.ஜ.க. இளைஞரணி தலைவர் மீது வழக்கு!

தி.மு.க. ஆட்சியில் 130 கோயில்கள் இடிப்பு என ட்விட்டரில் பதிவு: பா.ஜ.க. இளைஞரணி தலைவர் மீது வழக்கு!

ThangaveluBy : Thangavelu

  |  28 Jan 2022 11:33 AM GMT

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் சுமார் 130 கோயில் இடிக்கப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் மேலும் அந்த பதிவில் கூறியிருப்பதாவது: விடுதலைப்போரில் தமிழகம் என குடியரசு தினத்தில் கருப்பு கொடி பறக்கவிட்டவர்கள் 130 புனிதமான இந்து ஆலயங்களை இடித்துள்ளதாக செய்தி.

சுதந்திர போரைக் காட்டிலும் இந்துமதம் இப்போதுதான் அதிகம் நசுக்கப்படுகிறது! உள்ளாட்சியிலாவது நல்லாட்சி மலர்ந்து, விடுதலை பெற ஆதரிப்பீர் பாஜக கூட்டணிக்கு! இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், திமுக அரசு மீது பொய்யான வதந்தியை பரப்பியதாக கூறி இளங்கோவன் என்பவர் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Source: Polimer

Image Courtesy:The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News