Kathir News
Begin typing your search above and press return to search.

திருவண்ணாமலை கோவிலில் நடக்கும் அக்கிரமங்கள் - போராட்டத்தில் இறங்கிய இந்து அமைப்புகள் !

திருவண்ணாமலை கோவிலில் நடக்கும் அக்கிரமங்கள் - போராட்டத்தில் இறங்கிய இந்து அமைப்புகள் !

Mohan RajBy : Mohan Raj

  |  10 Nov 2021 9:08 AM GMT

பக்தர்களை கொரோனோ விதிகள் என்ற பெயரில் அலைக்கழித்து வரும் திருவண்ணாமலை கோவில் நிர்வாகத்தை எதிர்த்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

விஷ்வ இந்து பரிஷத் மாநிலத் துணை தலைவர் சக்திவேல் தலைமையில் அவரது குழுவினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் கோட்ட பொறுப்பாளர் ராஜசேகர் ஆகியோர் தி.மலையில் நேற்று கூட்டாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், "கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த 7-ம் தேதி 13 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 8-ம் தேதி 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தீபத் திருவிழாவுக்கு சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்களை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். அனுமதிக்கவில்லை என்றால் பா.ஜkக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ராஜகோபுரம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.





இணையத்தில் பதிவு செய்யும் போது சர்வர் பிரச்சினை உள்ளதால், எளிதாக முன்பதிவு செய்ய முடியவில்லை. மேலும் முன்பதிவு செய்யப்பட்ட சான்றில் அண்ணாமலையார் படத்தை புறக்கணித்துள்ளனர். ராஜகோபுரத்தை மூடிவிட்டு மூலவருக்கு மகா தீபாராதனை காண்பித்து வருகின்றனர், நவம்பர் 10-ம் தேதி முதல் நகரின் வெளியே பேருந்துகளை நிறுத்தும் முடிவை திரும்ப பெற வேண்டும். பக்தர்கள் யாரையும் அனுமதிக் காத நிலையில், பேருந்துகளை வெளியே நிறுத்துவது ஏன்?. 10 ரூபாய் கட்டணத்தில் பேருந்து பயணித்துவிட்டு, ஆட்டோவில் பயணிக்க 100 ரூபாய் செலவு செய்ய முடியுமா?. நகரில் வழக் கம்போல் பேருந்துகளை இயக்க வேண்டும்" என்ற கோரிக்கைகளை கூறினர்.


Source - Hindhu tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News