ஃபோட்டோஷாப் படங்கள், வெள்ளத்தில் அலங்கார பந்தல் - மழை வெள்ளத்தை நாடக மேடையாக்கும் முதல்வரின் நடிப்புகள்
By : Mohan Raj
முதல்வர் ஸ்டாலின் மழை நீரை வடிய வைப்பது போன்ற ஃபோட்டோஷப் புகைப்படத்தை பகிர்ந்தது சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
கடந்த 4 தினங்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்துவருகிறது, குறிப்பாக சென்னையில் மழை நீர் பல இடங்களில் தேங்கி வடிய வழி இல்லாமல் தண்ணீரில் மக்கள் அவதிப்படும் அளவிற்கு சூழ்ந்துள்ளது. இந்த பேரிடர் வேளையில் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் முக்கிய இடங்களில் பார்வையிடும் செயல் நடந்தேறியது, குறிப்பாக நேற்று அவரின் சொந்த தொகுதியான குளத்தூர் பகுதியில் இளங்கோவன் சாலை, பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பில் தண்ணீர் தேங்கியதை வடிய வைப்பது போன்று ஒரு புகைப்படத்தை முதல்வர் ட்விட்டர் பதிவில் வெளியிட்டார். அதில் தண்ணீரை மட்டும் இல்லாமல் மறைத்து வடிய வைத்தது போன்று ஃபோட்டோஷாப் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.
இதனை சமூக வலைதளங்களில் இணையவாசிகள் கிண்டல் செய்யவும் உடனே நீக்கினார். இப்படி மழை நேரத்தில் மக்களை காக்காமல் ஃபோட்டோஷாப் செய்து உதவிகள் செய்வதுபோல் ஒரு முதல்வரே நடிப்பது பலரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சென்னை மக்கள் அவதியில் இருக்கும்போது இப்படி ஃபோட்டோஷாப் செய்து விளையாட்டு காட்டுவது இவர் முதல்வர் என்பதை ஞாபகம் வைத்துள்ளாரா என சந்தேகிக்க தோன்றுகிறது.
இதற்கு இரு தினங்கள் முன் சைதாப்பேட்டை பாலத்தில் பந்தல் அலங்கார அமைப்புடன் வெள்ளத்தை பார்வையிட்டது சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடதக்கது .