Kathir News
Begin typing your search above and press return to search.

மாரிதாஸ் வழக்கை ரத்து செய்த நீதிபதியை விமர்சனம் செய்த தி.மு.க.விற்கு பதிலடி கொடுத்த எஸ்.ஜி.சூர்யா!

பொது சிவில் சட்டம் கருத்தரங்கம் கடந்த 2.11.2016 அன்று கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கான அழைப்பிதழ் நோட்டீஸில் இடம் பெற்ற மற்ற அனைவரையும் விட்டு அப்போது (கூடுதல் மத்திய அரசு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை) ஜி.ஆர்.சுவாமிநாதன் பெயரை மட்டும் கட்டிங் செய்து திமுக செய்தித்தொடர்பாளர் ராஜிவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது தற்போது மாரிதாஸ் வழக்கை ரத்து செய்திருப்பவர் நீதிபதி சுவாமிநாதன் என்பவர் ஆவார். அவரை பாஜகவுக்கு மட்டும் ஆதரவாக செயல்படுகின்றார் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார்.

மாரிதாஸ் வழக்கை ரத்து செய்த நீதிபதியை விமர்சனம் செய்த தி.மு.க.விற்கு பதிலடி கொடுத்த எஸ்.ஜி.சூர்யா!

ThangaveluBy : Thangavelu

  |  15 Dec 2021 8:53 AM GMT

பொது சிவில் சட்டம் கருத்தரங்கம் கடந்த 2.11.2016 அன்று கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கான அழைப்பிதழ் நோட்டீஸில் இடம் பெற்ற மற்ற அனைவரையும் விட்டு அப்போது (கூடுதல் மத்திய அரசு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை) ஜி.ஆர்.சுவாமிநாதன் பெயரை மட்டும் கட்டிங் செய்து திமுக செய்தித்தொடர்பாளர் ராஜிவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது தற்போது மாரிதாஸ் வழக்கை ரத்து செய்திருப்பவர் நீதிபதி சுவாமிநாதன் என்பவர் ஆவார். அவரை பாஜகவுக்கு மட்டும் ஆதரவாக செயல்படுகின்றார் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக ஊடகப்பிரிவு செய்தித்தொடர்பாளர் எஸ்.ஜி. சூர்யா அப்போது அச்சடிக்கப்பட்ட முழு நோட்டீஸையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த அழைப்பிதழலில் சிறப்புரை மாண்புமிகு நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்கள், உயர் நீதிமன்ற நீதிபதி ஓய்வு என குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது பெயருக்கு கீழ் சுவாமிநாதன், கூடுதல் மத்திய அரசு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் முன்னாள் நீதிபதியான ஏ.கே.ராஜனை நீட் தேர்வு குறித்து விசாரிப்பதற்கான குழுவை அமைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது ஓய்வு பெற்றுள்ள நீதிபதியை பாஜகவினர் ஏன் விமர்சனம் செய்ய மாட்டார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நீதிபதி என்பவர் திமுக என்றாலும் சரி, பாஜக என்றாலும் சரி, அல்லது பிற கட்சிகள் பொதுமக்கள் அனைவருக்கும் சமமான நீதியை வழங்குவது மட்டுமே அவர்களின் பணி ஆகும். எனவே நீதிபதிகளை விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல.

ஆனால் அதனை மறந்த திமுக தற்போது மாரிதாஸ் வழக்கை ரத்து செய்த நீதிபதி சுவாமி நாதன் மீது எவ்வித அரசியல் சாயமும் பூச வேண்டாம் என்ற பதிவினை அக்கட்சியை சேர்ந்த செய்தித்தொடர்பாளர் பதிவிட்டுள்ளார். அது மட்டுமின்றி தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து நீதிபதி பாராட்டியுள்ளார். அவரை பாராட்டிய நீதிபதி என்ன சொல்வது என்று கூட பேச்சுகள் எழுந்தது. ஆனால் அதனை அரசியல் ரீதியாக யாரும் எதிர்க்கவில்லை. நீதிபதி என்பவர் அனைவருக்கும் சமமான நீதியை மட்டுமே வழங்குபவர்கள். அவர்களை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வது சரியாக இருக்காது என்பது அனைவரின் கருத்தாகும்.

Source: Twiter

Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News