"அண்ணாமலை பத்தி கேட்காதீங்க" - நிருபர்களிடம் டென்ஷனான கே.என்.நேரு

"அண்ணாமலை தொடர்பான கேள்விகளை விட்டுத்தள்ளுங்கள். வேறு எதாவது கேளுங்கள்" என அண்ணாமலை பற்றிய கேள்வியை வைத்த நிருபர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு டென்ஷனாக பேசியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சில கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்பொழுது அண்ணாமலையை பற்றி கேட்கும்போது சரியாக பதிலளிக்காமல் கேள்வியை விட்டுதள்ளுங்கள் என கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது, "அண்ணாமலைக்கு எல்லாம் பயப்படத் தேவை இல்லை. அவர் புதிதாக பா.ஜ.க'வில் தலைவராகி இருக்கிறார். அவர் மக்களிடம் பெயர் வாங்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்று பேசுகிறார். தி.மு.க எதையும் சமாளிக்கும் வலுவான கட்சி. நாங்கள் சந்திக்காத எதிர்ப்பா? மிசாவையை எதிர்த்த இயக்கம் இது. இதற்கெல்லாம் தி.மு.க ஒருபோதும் பயப்படாது" என்று காட்டமாகப் பேசினார். மேலும் செய்தியாளர்கள் இதுபோன்ற கேள்விகளை எழுப்பியதுபோது, "அவர் தொடர்பான கேள்விகளை விட்டுத்தள்ளுங்கள். வேறு எதாவது கேளுங்கள்' என்று கூறினார். அண்ணாமலை சமீபகாலமாக தி.மு.க'வை அதிகம் விமர்சித்து வருவதால் தி.மு.க அமைச்சர்கள் அண்ணாமலைக்கு பதில் கூற தெரியாது பதைபதைப்புடன் வலம் வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.