சாஃப்டர் பள்ளியின் அலட்சிய நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் வெடித்தது !

By : Mohan Raj
நெல்லை சாப்டர் பள்ளியின் அலட்சிய போக்கை கண்டித்து சுவர் இடிந்து உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் உயிரிழந்த மாணவர்களின் பிரேதத்தை வாங்காமல் போராட்டம் நடத்தினர்.
நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
உயிரிழந்த மாணவர்களின் நண்பர்கள் பள்ளியின் அவலம், நிர்வாகத்தின் அலட்சிய போக்கு ஆகியவற்றை கண்டித்து மாணவர்கள் பள்ளியின் மேசை மற்றும் பொருள்களை அடித்து நொறுக்கினர்.
மாணவர்களை பலிகொடுத்த பெற்றொர்கள் பள்ளியின் அவல நிலையால் உயிரிழந்த உடல்களை வாங்காமல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனையடுத்து சாஃப்டர் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சாஃப்டர் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியர் ஞானசெல்வி, ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
