Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவிற்கு தேவை ராம ராஜ்ஜியம்தான் - உ.பி சட்டமன்றத்தில் ஓங்கி ஒலித்த யோகி ஆதித்யநாத் !

இந்தியாவிற்கு தேவை ராம ராஜ்ஜியம்தான் - உ.பி சட்டமன்றத்தில் ஓங்கி ஒலித்த யோகி ஆதித்யநாத் !
X

Mohan RajBy : Mohan Raj

  |  18 Dec 2021 8:30 AM IST

"இந்தியாவுக்குத் தேவை ராம ராஜ்ஜியம்தான்" என உத்திர பிரதேச அரசின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடரில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.


இந்தியாவில் 2022'ம் ஆண்டு துவக்கத்தில் உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது. இந்தியாவிலேய அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலம் என்கிற ரீதியில் மிகவும் முக்கிய தேர்தலாக பார்க்கப்படும்? இந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க'வே வெற்றி பெரும் என கருத்துக்கணிப்புகள் கூறி வரும் நிலையில் தற்பொழுது ஆளும் பா.ஜ.க அரசின் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது.


இதில் இடைக்கால பட்ஜெட்'டை தாக்கல் செய்துவிட்டு பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது, "சோஷியலிஸம் என்பது மிகப் பெரிய மாயை. இந்தியாவுக்குத் தேவை சோஷியலிஸமோ, கம்யூனிஸமோ அல்ல; ராம ராஜ்ஜியம்தான்! உ.பி-க்கும் ராம ராஜ்ஜியம்தான் தேவை. ராம ராஜ்ஜியம் என்பது நிரந்தரமானது, சூழ்நிலைகளுக்காக மாறாதது. மொத்த பிரபஞ்சத்துக்குமானது'' என்று பேசினார்.

உத்திரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் 2024'ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News