தீவிர இடதுசாரித்துவம் முடிவுக்கு வந்துவிட்டது - அமித்ஷா'வின் கர்ஜனை !

"கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு இடத்தில் கூட ஊழல் என்பதை மக்கள் கண்டிருக்க முடியாது" என மத்தியில் ஆளும் மோடி அரசை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமை பொங்க கூறியுள்ளார்.
புதுதில்லியில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, "கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு இடத்தில் கூட ஊழல் என்பதை மக்கள் கண்டிருக்க முடியாது. நாங்கள் ஓரிரு தவறான முடிவுகளை எடுத்திருக்கலாம். அந்த முடிவுகள் தவறானதாக இருந்தாலும் எங்கள் நோக்கம் தவறு என விமர்சகர்கள் கூட விமர்சித்தது இல்லை.
எங்கள் அரசு பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. பிரதமர் மோடியின் ஆளுமையாலும், 130 கோடி மக்களின் பங்களிப்பாலும் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்தது. பொருளாதாரம் அதிவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. 155 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளில் நம் நாடு பெரும் மாற்றங்களை அடைந்துள்ளது.
தீவிர இடதுசாரித்துவம் முடிவுக்கு வந்துவிட்டது. நாட்டின் மருத்துவ கட்டமைப்பு முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஒரு அரசு ஐம்பது ஆண்டுகளில் 4 அல்லது 5 முக்கிய முடிவுகளை எடுக்கும், ஆனால் மோடி அரசு வெறும் ஏழு ஆண்டுகளில் 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் பிரதமர் மோடியின் தொலைக்கு பார்வை தான்" என உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமை பொங்க பேசியுள்ளார்.
Image source - ANI