Kathir News
Begin typing your search above and press return to search.

பப்ளிசிட்டி பிரியர் எம்.பி சு.வெங்கடேசனுக்கு பதிலடி தந்த அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா !

பப்ளிசிட்டி பிரியர் எம்.பி சு.வெங்கடேசனுக்கு பதிலடி தந்த அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா !
X

Mohan RajBy : Mohan Raj

  |  24 Dec 2021 7:42 AM IST

மதுரை விமான நிலையத்தை வைத்து பப்ளிசிட்டி தேட முயன்ற மதுரை கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசனுக்கு "மதுரையில் ஏற்கனவே சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன, அந்த விமான நிலையத்தை 'சர்வதேச விமான நிலையம்' என அழைப்பதுதான் உங்கள் பிரச்சனையா" என பதிலடி கொடுத்துள்ளார் ஜோதிராதித்யா எம.சிந்தியா.

மதுரை கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் அவர்கள் ஒரு பப்ளிசிட்டி விரும்பி, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசிடம் கோரிக்கைகளை அடுக்குகிறேன் என்ற பெயரில் அடிக்கடி ஏதாவது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவார். இரு தினங்களுக்கு முன் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா அவர்களை எம்.பி மாணிக்கம் தாகூர் அவர்களுடன் பப்ளிசிட்டி எம்.பி சு.வெங்கடேசன் அவர்கள் நேரில் சந்நித்தார். அப்பொழுது "மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என தமிழக தென்மாவட்ட எம்.பி'க்கள் கையெழுத்திட்ட மனுவினை ஜோதிராதித்யா எம்.சிந்தியாவிடம் வழங்கினார், மேலும் மத்திய அமைச்சர் மதுரையிலிருந்து அபுதாபி, மஸ்கட், சிங்கப்பூர்,கோலாலம்பூருக்கு விமானங்களை இயக்க முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர்களிடம் உறுதி அளித்தார்.

இந்த சந்திப்பின் அடுத்தநாள் எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில் ஒரு பதிவிடுகிறார். அதில், "பல வடமாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் தான் இருக்கிறது. தமிழகத்திற்கு நான்காவதாக மதுரைக்கு கேட்பது என்ன நியாயம்? தர முடியாது" என்கிறார் விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா, தமிழகமாகிய நாங்கள் தான் அதிக வரி செலுத்துகிறோம், ஆகவே எங்களுக்கு 4 விமான நிலையங்கள் இல்லை 14 கேட்க உரிமை உண்டு" என விஷயத்தை விவகாரமாக்கும் தோனியில் ட்விட்டர் பதிவிடுகிறார். அதாவது மத்திய விமானத்துறை அமைச்சரிடம் மதுரை விமான நிலையம் பற்றி கோரிக்கை வைத்துவிட்டு வந்த அடுத்த நாளே மத்திய அமைச்சர் அதனை மறுப்பது போல் விஷயத்தை விவகாரமாக்க முயல்வது போல் ட்விட்டர் பதிவிடுகிறார். இவ்வளவிற்கும், "மத்திய அமைச்சர் மதுரையிலிருந்து அபுதாபி, மஸ்கட், சிங்கப்பூர்,கோலாலம்பூருக்கு விமானங்களை இயக்க முன்னுரிமை வழங்கப்படும்" என உறுதியளித்ததாக எம்.பி.வெங்கடேசனே முதல்நாள் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். ஆனாலும் அடுத்தநாளே பப்ளிசிட்டிக்காக மத்திய அமைச்சர் முடியாது என கூறியுள்ளதாக அவதூறு பரப்பி பிரபலம் தேட நினைக்கிறார் கம்யூனிசவாதி.

இதற்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா பதிலடி தரும் விதமாக ட்விட்டரில் தெரிவிக்கையில், "மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டே வருகின்றன, 'சர்வதேச விமான நிலையம்' என்ற பெயர்தான் உங்கள் பிரச்சினையா?" என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் "மத்திய அரசின் நோக்கமே சர்வதேச விமான நிலையங்களை அதிகப்படுத்துவதுதான், அதற்கான முயற்சிகளை செய்து வருகிறது" எனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசே சர்வதேச விமான நிலையத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் மும்முரமாக இருக்க பப்ளிசிட்டிக்காக அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா முடியாது என மறுத்துள்ளதை போல் பிம்பத்தை ஏற்படுத்தி குழப்பத்தை விளைவிக்க முயல்கிறார் இந்த கம்யூனிசவாதி எம்.பி சு.வெங்கடேசன்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News