Kathir News
Begin typing your search above and press return to search.

"பிரதமர் சாலையில் வருவது அனைவருக்கும் தெரியும்" - தோல்வியை ஒப்புக்கொண்ட பஞ்சாப் அரசு! சதி காரணமா?

பிரதமர் சாலையில் வருவது அனைவருக்கும் தெரியும் - தோல்வியை ஒப்புக்கொண்ட பஞ்சாப் அரசு! சதி காரணமா?
X

Mohan RajBy : Mohan Raj

  |  5 Jan 2022 6:26 PM IST

பஞ்சாப் மாநிலத்தில் இன்று பிரதமர் மோடி செல்லும் வழியில் கலவரக்காரர்கள் ஏற்படுத்திய இடையூறு காரணமாக 20 நிமிடம் பாலத்தில் பிரதமர் மோடி காரில் அமரவைக்கப்பட்டது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என பஞ்சாப் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.


பஞ்சாப் மாநிலத்தில் கலவரக்காரர்கள் ஏற்படுத்திய இடையூறுகளால் பிரதமர் பயணம் தடைபட்டு, அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் சாலை வழியை பயணம் செய்வது தெரியாது என அலட்சியமாக கூறி வந்த நிலையில், "பிரதமர் மோடி சாலை மார்க்கமாக பயணம் செயவது அனைவருக்கும் தெரியும், பஞ்சாப் போலீசார் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்" பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா தெரிவித்துள்ளார். மேலும் சாலை பாதுகாப்பு முறை, மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய பஞ்சாப் அரசு தவறிவிட்டது எனவும் ஒப்புக்கொண்டுள்ளார்.


பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆகய மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் ஃபெரோஸ்பூருக்கு செல்லவிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த திட்ட ஏற்பாடுகள் அனைவருக்கும் தெரியும், மேலும் ஒரு நாள் முன்னதாகவே பிரதமர் பாதுகாப்பு முழு ஒத்திகையை பஞ்சாப் காவல்துறை மற்றும் எஸ்.பி.ஜி செயல்படுத்தினார், ஒத்திகை வெற்றிகரமாகவும் நடந்து முடிந்தது.

ஆனால் ஒத்திகையை வெற்றிகரமாக நடத்திவிட்டு பிரதமர் வரும் போது இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடுகளை தடுக்க முடியாமல் பஞ்சாப் அரசு காரணங்களை கூறுகிறது. மேலும் இந்த காரணத்தினால் ஃபெரோஸ்பூர் எஸ்.எஸ்.பி ஹர்மன் ஹன்ஸ் பாதுகாப்புக் குறைபாட்டிற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


Source - opindia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News