Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் பாதுகாப்பு விதிமீறல் : பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமீரிந்தர் சிங் கிடுக்குப்பிடி கேள்வி!

பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று சென்றிருந்தார். அவர் செல்லவிருந்த ஹெலிகாப்டர் வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக பயணம் செய்ய பாதுகாப்பு அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனையடுத்து பிரதமர் மோடியின் கார் சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்தார்.

பிரதமர் பாதுகாப்பு விதிமீறல் : பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமீரிந்தர் சிங் கிடுக்குப்பிடி கேள்வி!
X

ThangaveluBy : Thangavelu

  |  5 Jan 2022 1:03 PM GMT

பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று சென்றிருந்தார். அவர் செல்லவிருந்த ஹெலிகாப்டர் வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக பயணம் செய்ய பாதுகாப்பு அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனையடுத்து பிரதமர் மோடியின் கார் சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது பிரதமர் மோடி சென்ற கான்வாயை விவசாயிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அவர் சென்ற கான்வாய் 20 நிமிடங்களாக மேம்பாலத்தின் மீது சிக்கிக்கொண்டது. இதனால் பிரதமர் மோடி பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பிரதமர் வருகின்றார் என்றால் அவருக்கு அனைத்து விதமான பாதுகாப்பையும் மாநில போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் முதலமைச்சர் மற்றும் டிஜிபி இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததே பிரதமர் மோடி வாகனம் நிற்பதற்கு காரணம் என பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க முடியாத மாநில முதலமைச்சர் உடனடியாக பதவியை விட்டு விலக வேண்டும். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில், பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் நாட்டின் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க முடியாதபோது, முதலமைச்சராக நீடிக்க உங்களுக்கு தகுதியில்லை. உனடியாக பதவி விலக வேண்டும் என கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Source, Image Courtesy: ANI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News