Kathir News
Begin typing your search above and press return to search.

உத்தர பிரதேசத்தில் அதிரடி காட்டும் பா.ஜ.க: இரண்டு முக்கிய கட்சிகளை கூட்டணியில் இனைத்தது !

உத்தர பிரதேசத்தில் அதிரடி காட்டும் பா.ஜ.க: இரண்டு முக்கிய கட்சிகளை கூட்டணியில் இனைத்தது !

ThangaveluBy : Thangavelu

  |  20 Jan 2022 4:24 AM GMT

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் அப்னா தள் மற்றும் நிஷாத் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து 403 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என்று தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் தேர்வு என்று மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி பாஜக கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் பற்றி ஆலோசனை நடத்த அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையே கூட்டம் முடிந்த பின்னர் ஜே.பி.நட்டா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் அப்னா தள், நிஷாத் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. 403 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். இரட்டை இன்ஜீன் கொண்டு அரசு மூலம் மாநிலத்தில் ஏராளமான வளர்ச்சிகள் நடைபெற்றுள்ளது. வரப்போகின்ற தேர்தலில் அசுர பலத்துடன் ஆட்சியை பிடிப்போம் எனக் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News