Kathir News
Begin typing your search above and press return to search.

மாணவி மரணத்திற்கு நியாயம் கேட்டு நாளை பா.ஜ.க. சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்!

மாணவி மரணத்திற்கு நியாயம் கேட்டு நாளை பா.ஜ.க. சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  24 Jan 2022 7:26 PM IST

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியை மதமாற்றுவதற்கு கட்டாயப்படுத்தியதால் அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் வாக்கு மூலம் ஒட்டு மொத்த இந்துக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மதம் மாற முடியாது என்று மாணவி கூறவே, அவருக்கு கொடுரமான முறையில் தண்டனை கொடுத்து வந்துள்ளது பள்ளி நிர்வாகம். அதாவது கழிவறையை சுத்தம் செய்வது, விடுதி முழுவதும் சுத்தம் செய்வது போன்ற பணிகளை கொடுத்து மாணவியை மனதளவிலும், உடல் அளவிலும் சித்ரவதை செய்துள்ளனர். இதனால் நொந்துபோன மாணவி தான் கடைசிவரை கிறிஸ்துவ மதத்திற்கு மாற முடியாது என்று கூறி தனது உயிரை விட்டுள்ளார். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகம் என்று போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் நாளை (ஜனவரி 25) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News