Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க'வை திணற வைக்கும் கோவை மண்டலம்

தி.மு.கவை திணற வைக்கும் கோவை மண்டலம்
X

Mohan RajBy : Mohan Raj

  |  13 Feb 2022 6:41 PM GMT

தேர்தல்களில் தி.மு.க'வை தண்ணீர் குடிக்க வைக்கும் அளவிற்கு திணறல் ஏற்படுத்தி வருகிறது கொங்கு மண்டலம் அது பற்றிய ஒரு பார்வை.


கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் 15,38,411 வாக்காளர்கள் உள்ளனர், கோவை மாவட்டம் அ.தி.மு.க'வின் பலம் வாய்ந்த இடம் காரணம் அங்கு கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்தாலும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 இடங்களும் அ.தி.மு.க கூட்டணி வசமே வந்தது, பா.ஜ.க.வின் 4 எம்.எல்.ஏ'க்களில் ஒரு எம்.எல்.ஏ கோவையில் வெற்றி பெற்ற இடத்தை கைப்பற்றினார்.


இதன் காரணமாகவே தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கோவை மாவட்டத்திற்கு தான் முதல் முதலில் வருகை புரிந்தார் "சட்டமன்றத்திலும் தி.மு.க கோவை மாவட்டத்தை புறக்கணிக்கவில்லை எங்களுக்கு வாக்களித்தவர்கள் பெருமைப்படும் அளவுக்கு வாக்காளர்கள் தி.மு.க'வுக்கு வாக்களிக்காமல் போய் விட்டோமே என வருந்தும் அளவுக்கும் தி.மு.க அரசின் செயல்பாடுகள் இருக்கும்" என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தது கோவை மாவட்ட தோல்வியை மனதில் வைத்துதான்.


அவரைத் தொடர்ந்து தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயநிதியும் கூட "கோவை மக்களை ஏமாற்றி விட்டனர் நான்கு அல்லது ஐந்து இடங்களில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தோம் ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என தெரிவித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமித்தது உள்ளாட்சித் தேர்தல் வேலையை பார்க்கச் சொல்லும் வகையில் இருந்தது தி.மு.க'விற்கு கோவை மாவட்டத்தின் பாதிப்பு.


இந்நிலையில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கோவையை தன்னிடமிருந்து விட்டுக் கொடுக்கக் கூடாது என குறியாக உள்ளது அ.தி.மு.க மேலும் பா.ஜ.க'வும் மெல்ல அங்கு பலமடைந்து வருகிறது, இதற்கிடையில் கோவையில் உள்ள சில தி.மு.க பிரமுகர்கள் மாற்று பகுதி ஆளான கரூர் செந்தில்பாலாஜி வந்து கோவையில் தேர்தல் வேலையை பார்ப்பது பிடிக்காமல் மனமுடைந்து உளளனர் என்பது கூடுதல் தகவல்.


இதுகுறித்து அ.தி.மு.க'வை சேர்ந்த கோவை சத்தியன் கூறும்போது, "கோவை மாவட்டத்தில் தி.மு.க'விற்கு ஆள் இல்லாம தான் கரூரிலிருந்து அமைச்சரை வரவழைத்துள்ளார், கோவை எப்போதுமே அ.தி.மு.க'வசம்தான் கோவை மாநகராட்சியில் எஞ்சியுள்ள சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியதை தவிர கடந்த எட்டு மாதங்களில் கோவை மாவட்டத்திறகு தி.மு.க அரசு எதையும் செய்யவில்லை. பரவலாக தண்ணீர் பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொண்டதும் அ.தி.மு.க'தான் ஆனால் சிறுவாணி தண்ணீரை கூட கேரள அரசிடம் இருந்து பெற முடியாமல் தி.மு.க திணறி வருகிறது. மேலும் பொங்கல் தொகுப்பில் நடந்த பல நூறு கோடி ரூபாய் ஊழலை மக்கள் நன்கு அறிவர். தி.மு.க அரசின் தோல்வியை மறக்க அ.தி.மு.க எதுவுமே செய்யவில்லை என வீண்பழி சுமத்தி வருகின்றனர்" என்றார்.


கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட நிலைமை இந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க'வுக்கு ஏற்பட்டால் கண்டிப்பாக அதே மனநிலை தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவும் என்பதை மற்றவர்களைவிட தி.மு.க தலைமை நன்கு அறியும் அதனாலேயே மற்ற மண்டலங்களை விட கோவை மண்டலத்தை சிறப்பாக கவனித்து வருகிறது தி.மு.க.



Source - BBC Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News