எமர்ஜென்சி இருண்ட காலம் என்று சொன்ன ஸ்டாலின், ராகுலை வைத்து புத்தகம் வெளியிடுவது எப்படி!
By : Thangavelu
முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (பிப்ரவரி 28) தான் எழுதியதாக ஒரு புத்தகத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை வைத்து வெளியிட்டார். இந்த புத்தக வெளியிட்டு விழாவுக்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
I congratulate Thiru @mkstalin avl on his book release today.There he recalls his arrest during the emergency as the darkest time of TN
— K.Annamalai (@annamalai_k) February 28, 2022
Grand mother Indira Gandhi ji does it
Her Grand Son @RahulGandhi ji proudly release the book
Just like their alliance, what an irony of sorts!
ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை ராகுல் காந்தியை வைத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து ஒன்றை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்கள். எமர்ஜென்சியில் தான் கைது செய்யப்பட்டதை தமிழ்நாட்டினுடைய இருண்டகாலம் என்று குறிப்பிட்டுள்ளார். திருமதி இந்திரா காந்தி அவர்கள் இதை செய்தார்! அவருடைய பேரன் திரு. ராகுல் காந்தி பெருமையுடன் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். திமுக, காங்கிரஸ் கூட்டணியை போல எத்தனை முரண்பாடுகள் இவர்களுடைய செய்கைகளில்! இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter