Kathir News
Begin typing your search above and press return to search.

"புது வாழ்வு கிடைத்துள்ளது, என்னை மீட்ட இந்திய அரசுக்கு நன்றி" - குண்டடிபட்ட ஹர்ஜோத் சிங் மத்திய அரசுக்கு நன்றி

புது வாழ்வு கிடைத்துள்ளது, என்னை மீட்ட இந்திய அரசுக்கு நன்றி - குண்டடிபட்ட ஹர்ஜோத் சிங் மத்திய அரசுக்கு நன்றி
X

Mohan RajBy : Mohan Raj

  |  8 March 2022 8:04 AM IST

"எனக்கு ஒரு புது வாழ்க்கை கிடைத்துள்ளது, நான் புதிதாக தொடங்க விரும்புகிறேன் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன்" என உக்ரைன் போரில் குண்டடிபட்ட ஹர்ஜோத் சிங் தெரிவித்துள்ளார்.


ரஷ்ய உக்ரைன் போர் உக்கிரமாக இருக்கும் நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு "ஆபரேஷன் கங்கா" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த சத்தர்பூர் இல் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஹர்ஜோத் சிங் உக்ரேனில் மேற்படிப்புக்காக இருந்தார். அப்போது நடந்த சண்டையில் அவர் குண்டடிபட்டார் அவரின் மேல் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்தன, ஒன்று காலில் மற்றொன்று மார்பில் சிக்கிக் கொண்டன எதனால் அங்குள்ள அவர் எப்படித் தப்பிப்பது என்று தவித்த வேளையில் இந்திய அரசு கை கொடுத்துள்ளது.


கிவ்'வில் புல்லட் காயமடைந்த இந்தியர் ஹர்ஜோத் சிங் இன்று மார்ச் 7ஆம் தேதி இந்தியா திரும்புவார் என மத்திய இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் டுவிட்டரில் அறிவித்துள்ளார். மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் ஹர்ஜோத் சிங் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடு செய்த மத்திய அரசிற்கு நன்றி கூறியுள்ளார். அப்பொழுது அவர் கூறியதாவது, "எனக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளதால் நான் புதிதாக வாழ்வை தொடங்க விரும்புகிறேன்! எனது குடும்பத்தை நேரத்தை குடும்பத்துடன் செலவிட விரும்புகிறேன். என்னை மீட்ட மத்தியர அரசுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.


Source - OpIndia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News