ஒருபுறம் எதிர்ப்பு, மறுபுறம் கோரிக்கை: ஆளுநர் விவகாரத்தில் குழம்பி நிற்கும் தி.மு.க !
By : Thangavelu
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தில் ஒரு புறம் கோரிக்கை வைப்பதும், மறுபுறத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது திமுகவின் இரட்டை வேடங்கள் அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தில் நீட் விலக்கு வேண்டும் என்று சட்டமன்றத்தில் திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியது. அந்த மனு சில மாதங்கள் நிலுவையில் இருந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். உச்சநீதிமன்றத்திற்கு எதிரானது என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையில் திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஆளுநரை உடனடியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால் அதே சமயம் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சில அமைச்சர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது நீட் விலக்கு விரைவில் கிடைக்கும் அதற்கான ஆவண பரிசோதனையில் ஆளுநர் ஈடுபட்டிருக்கிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். ஆளுநர் விவகாரத்தில் ஒரு புறம் எதிர்ப்பது மறுபுறம் கோரிக்கை வைப்பது போன்ற விவகாரத்தால் திமுக அரசு ஆட்டம் காணுவதாக கூறப்படுகிறது.
Source: News J
Image Courtesy: DT Next