Kathir News
Begin typing your search above and press return to search.

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு ஆதரவாக அல்கொய்தாவின் வீடியோ - பதறும் மாணவியின் தந்தை!

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு ஆதரவாக அல்கொய்தாவின் வீடியோ - பதறும் மாணவியின்  தந்தை!

Mohan RajBy : Mohan Raj

  |  7 April 2022 11:21 AM GMT

'நாங்கள் எங்கள் நாட்டில் அமைதியாக வாழ்கிறோம் யாரும் எங்களைப் பற்றி பேசவே தேவையில்லை' என கர்நாடக ஹிஜாப் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கர்நாடக மாணவியின் தந்தை அல்-கொய்தாவிற்கு பதிலளித்துள்ளார். மேலும் இதன் பின்னணி குறித்து விசாரிக்க'கர்நாடக உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகத்தில் நடைபெற்ற ஹிஜாப் விவகாரம் இந்திய அளவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது, இஸ்லாமிய நாடுகளில் இருந்து ஹிஜாப் விவகாரத்திற்கு கருத்துக்கள் வெளிவந்த நிலையில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அல்-ஜவாஹிரி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் அவர், "இந்து சமுதாயத்தில் முஸ்லிம்கள் ஏமாற்றப்படுவதை இந்தியர்கள் தவிர்க்கவேண்டும், தொடக்கத்தில் இது முஸ்லிம்களை ஒடுக்கும் கருவியாக இருந்ததில்லை ஆனால் எப்பொழுது ஹிஜாபை தடை செய்ததாக கூறப்பட்டதோ அப்பொழுதே முஸ்லீம்களை ஒடுக்கும் ஓர் உண்மை கருவியாக இருப்பது அம்பலமாகி உள்ளது" என பேசியிருந்தார் மேலும் அந்த வீடியோவில் அரபி மொழியில் அவர் பேசி இருந்த காணொளி ஆங்கில சப் டைட்டிலுடன் இருந்தது. இறுதியில் அந்த மாணவிக்காக ஒரு கவிதையை வாசித்து, 'என் வீர தங்கைக்கு சமைக்கத் சமர்ப்பிக்கிறேன்' எனவும் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் கூறியிருந்தார்.

தற்போது அந்த மாணவியின் தந்தை இந்த வீடியோ குறித்து பேசியுள்ளார் அவர் அது பற்றிக் கூறும் போது, "எங்களுக்கு அந்த காணொளி குறித்து எதுவும் தெரியாது அதில் பேசியவர் யார் என்று கூட தெரியாது இன்று தான் முதன் முதலாக அவனை நான் பார்க்கிறேன் அந்த காணொளியில் அரபு மொழியில் ஏதோ கூறுகிறார்கள் ஆனால் நாங்கள் இங்கு அமைதியுடன், அன்புடன் வாழ்கிறோம். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் இந்த காணொளிகள் எங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளை உண்டாகும் நாங்கள் எங்கள் நாட்டில் அமைதியாக வாழ்கிறோம் எங்களைப் பற்றி யாரும் எதுவும் பேச தேவையில்லை எங்களுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவருடன் இந்த பேச்சு வேற்றுமை அதிகரிக்கும்' என கூறியுள்ளார்.

இந்த காணொளி குறித்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் அராகா கூறுகையில், "இந்த விவகாரத்தில் பல அறியாத கைகளில் பங்கு இருப்பதை உணரமுடிகிறது. உள்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு இந்த விவகாரம் இதில் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் விவகாரத்தில் வேண்டுமென்றே சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்வதாக கூறி வந்த நிலையில் அல்கொய்தா என்ற பெரிய தீவிரவாத அமைப்பு இதற்கு ஆதரவாக வெளியிட்டிருப்பது கருத்து வெளியிட்டிருப்பது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News