அ.தி.மு.க ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட 14417 மாணவர்கள் ஹெல்ப்லைன் - தி.மு.க ஆட்சியில் தூங்குகிறது !

மாணவர்களுக்கு உதவ கடந்த அ.தி.மு.க ஆட்சியில் துவங்கப்பட்ட ஹெல்ப்லைன் தற்பொழுது தி.மு.க'வால் காழ்ப்புணர்ச்சி காரணமாக கண்டுக்கொள்ளப்படாததால் அங்குள்ள ஊழியர்கள் வரும் புகார்களை என்ன செய்வது என தெரியாமல் கதறுகின்றனர்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கவும், உயர் கல்விக்கு தேவையான ஆலோசனை பெறவும் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை போக்கிக் கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஹெல்ப் லைன் செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் தொடங்கப்பட்டது.
14417 என்ற எண்ணின் மூலமாக 24 மணி நேரமும் மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களை போக்கிக் கொள்ளும் வகையில் இது செயல்பட்டு வந்தது. இந்த மையத்தில் பெறப்படும் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டு அவ்வபோது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது.
ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நிர்வாக கோளாறுகள் காரணமாக இந்த உதவி மையத்திற்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவது இல்லை என்று குறைதீர் மையத்தில் பணியாற்றுபவர்களே குறையோடு பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை உள்ளிட்ட சில இடங்களில் பாலியல் பிரச்சனைகள் எழவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 14417 என்ற இந்த எண்ணை தொடர்பு கொண்டு மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டால் தெரிவிக்கலாம் என்று பேட்டி கொடுத்திருந்தார். அவர் பேட்டி கொடுத்த அந்த நாளிலிருந்து தினசரி 100 அழைப்புகளுக்கு குறையாமல் வருவதாகவும் ஆனால் அதன் மூலம் வரக்கூடிய குறைகளை யாரிடம் தெரிவிப்பது என்று தான் தங்களுக்கு தெரியவில்லை என ஊழியர்கள் கதறுகின்றனர்.
தற்பொழுது அதிகளவில் பள்ளி மாணவ, மாணவிகள் பாலியல் புகார் போன்றவற்றில் பாதிக்கப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் இங்கு வரும் அழைப்புகளும் அதிகரித்துள்ளன ஆனால் இதனை கண்டுகொள்ள தி.மு.க அரசு தயாராக இல்லாத காரணத்தினால் பாலியல் சீண்டல்கள் தொடர்பான புகார்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் கொடுத்தால் அவர்களுக்கு இதில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் விழிப்பதாகவும் கூறுகின்றனர்.. இது காவல்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் யாரிடம் தெரிவிப்பது என்றும் புரியாமல் திணறுகின்றனர்.
நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல் விடியல் தரும் அரசு என விளம்பரம் மட்டும் செய்தால் இப்படித்தான் நடக்கும் என பலர் புலம்புகின்றனர்.