லஞ்சம் வாங்குற அரசு அதிகாரி பேரை போஸ்டர் அடிச்சு ஓட்டப்போறோம் - அண்ணாமலை அடியால் அலறும் அரசு அலுவலகங்கள்
By : Mohan Raj
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலர்கள் மத்தியிலும், அரசு அலுவலகங்கள் செயல்பாட்டிலும் லஞ்சம் புழங்குகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் தமிழக பாஜக சார்பில் லஞ்சம் வாங்கி மக்கள் பணி செய்யாத அரசு ஊழியர்களை போஸ்டர் அடித்து ஓட்டுவோம் என அண்ணாமலை கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாது அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு அமைந்ததில் இருந்து அண்ணாமலை தீவிரமாக திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார், அனைத்து நடவடிக்கைகள், மக்கள் திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகள், திமுக அமைச்சர்களின் ஊழல்கள், மக்கள் மீதான திமுகவினரின் அத்துமீறல்கள், முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கைகள், முதல்வர் ஸ்டாலின் குடும்ப அரசியல், கோடி கோடியான பண விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் என அனைத்தையும் அண்ணாமலை விமர்சித்து வருகிறார். இதனாலேயே அண்ணாமலை பேசுகிறார் என்றால் திமுக அமைச்சர்கள் விமர்சிக்க தயங்குவார்கள். அந்தளவிற்கு திமுக அரசின் சிம்மசொப்பனமாக விளங்குகிறார் அண்ணாமலை.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் 25 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றார் பாஜக தலைவர் அண்ணாமலை.
பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் பேசிய அண்ணாமலை கூறியதாவது, 'தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க 15 நாட்கள் கால அவகாசம் தருகிறோம். முதலமைச்சர் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறினால் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம்.
தமிழக அரசு நடவடிக்கை எடுக்வில்லை என்றால் அதிகாரிகளின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் அடிப்போம்' என கூறினார் அண்ணாமலை. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசு அதிகாரிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை திமுகவினர் ஈரோடு தேர்தலில் ஈடுபடும் விதிமுறை மீறிய செயல்களை மக்கள் முன்பு அம்பலப்படுத்தினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, 'கடந்த வாரம், வாக்காளர்களுக்கு தலா 2 கிலோ இறைச்சியை லஞ்சமாக விநியோகம் செய்துள்ளனர். தொகுதியில் முகாமிட்டுள்ள திமுக அமைச்சர்கள், தொகுதியில் குறிப்பிட்ட இடத்தில் தினமும், அமரும் வாக்காளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும், தொடர்ச்சியாக 20 நாட்கள் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்தால் ரூ.5 ஆயிரமும் பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
தமிழக பா.ஜ.,வினர் அளித்த புகார்களில் மாநில தேர்தல் ஆணையம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக., அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் கொடுத்துள்ளோம் ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.