Kathir News
Begin typing your search above and press return to search.

பாஜகவில் இணைந்த 15 அதிமுக எம்எல்ஏக்கள்!

பாஜகவில் இணைந்த 15 அதிமுக எம்எல்ஏக்கள்!
X

SushmithaBy : Sushmitha

  |  7 Feb 2024 4:33 PM IST

டெல்லியில் இன்று மத்திய இணை அமைச்சர் எம் முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் முன்னிலையில் அதிமுகவைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

கரூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு கே.வடிவேல், கோயம்புத்தூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு சேலஞ்சர் துரைசாமி, பொள்ளாச்சி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.வி.ரத்தினம், சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.வி.ரத்தினம், சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.சின்னசாமி, அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.எஸ்.கந்தசாமி, தேனி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.ஆர்.ஜெயராமன், வலங்கைமான் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் தமிழக அமைச்சர் திருமதி. கோமதி சீனிவாசன், வேடசந்தூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.எம்.வாசன்,

ஆண்டிமடம் தொகுதி முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.தங்கராஜ் , புவனகிரி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.அருள், பாளையங்கோட்டை தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.குருநாதன், காங்கேயம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திருமதி. செல்வி முருகேசன், திட்டக்குடி தொகுதி முன்னாள் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் திரு. கே. தமிழழகன், காட்டுமன்னார் கோவில் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.ராஜேந்திரன், கொளத்தூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ஏ.ரோகிணி மற்றும் முன்னாள் சிதம்பரம் திமுக பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் குழந்தைவேலு ஆகியோர் இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்த செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், மக்கள் நலன் சார்ந்த, நேர்மையான அரசியல் மாற்றம் உருவாக்க, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, அனைவரின் மேலான உழைப்பையும் ஒத்துழைப்பையும் கோருகிறேன் என்று மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News