Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு ஓட்டுக்கு ரூ.15000, தங்க காசு - தமிழகத்தை உலுக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஒரு ஓட்டுக்கு ரூ.15000, தங்க காசு - தமிழகத்தை உலுக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
X

Mohan RajBy : Mohan Raj

  |  20 Feb 2023 7:21 AM GMT

ஈரோடு கிழக்கில் இதுவரை திமுக ஒரு ஆளுக்கு பதினைந்தாயிரம் ரூபாய் செலவு செய்து இருப்பதாகவும், தேர்தல் நெருங்கும் இடையில் ஒரு நபருக்கு ஒரு கிராம் கோல்டு காயின் கொடுக்க திட்டமிட்டு மொத்தமாக தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்தவர் தாங்க திருமகன் ஈ.வே.ரா இவர் இப்ப அறிவிச்சுருக்க ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன், திருமகன் ஈ.வே.ரா உடல்நலக்குறைவால காலமானதுனால ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதா அறிவிக்கப்பட்டது, உடனே தேர்தல் ஆணையம் வர பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் அறிவிச்சது தேர்தல் அறிவிச்சது மட்டும் இல்லாம உடனே அந்த இடத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு வந்துச்சு.

இந்த மாதிரி இருக்கிற நிலைமையில் இன்னும் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துல நாடாளுமன்ற தேர்தல் வரவேற்கும் நிலையில் இந்த ஈரோடு கிழக்கு தொகுதியோட இடைத்தேர்தல் ரொம்ப முக்கியமாகவே அனைத்து கட்சியாலும் பார்க்கப்படுது, இந்த நிலையில் தற்பொழுது ஈரோட்டில் அனைத்து கட்சியினரும் பரபர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார், அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கேயே தங்கி இருந்து கட்சியினரை முடுக்கிவிட்டு வேலை பார்த்து வருகிறார். மறுபுறம் நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் அவரது பேச்சாளர்கள் அங்கு வேலை செய்கின்றனர்.

மறுபுறம் திமுகவின் அமைச்சர்கள் 11 பேருடன் குழுவினருடன் செந்தில் பாலாஜி அங்கே முகாமிட்டுள்ளார். திமுக தரப்பிற்கு சற்று பின்னடைவு ஏற்படுத்துவது தெரிந்தும் இந்த வாரத்தின் இறுதியில் முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் அமைச்சர் உதயநிதியும் அங்கு சென்று பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மையம் கமலஹாசனின் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார்.

இப்படி ஒவ்வொரு பக்கமும் பிரச்சாரம் செய்து மக்களை கவரும் வேளையில், மற்றொரு வகையிலும் திமுக ஓட்டுகளை கவர நடவடிக்கை எடுத்து வருவது தெரிகிறது அது எப்படி என்றால் ஒரு நாளைக்கு ஒரு வீட்டில் இருவர் கூலி வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் அந்த இருவரையும் அழைத்து வந்து மூன்று வேளை சாப்பாடு மற்றும் 500 ரூபாய் பணம் என கொடுத்து இதுவரையில் ஒரு ஆளுக்கு கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு 15 ஆயிரம் விதம் செலவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் தேர்தல் நெருங்கும் நிலையில் சேலத்தில் ஒரு முக்கியமான இடத்தில் ஒரு கிராம் தங்க காசுகள் செய்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் யூ ட்யூப் சேனல் நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, 'ஈரோட்டில் தேர்தல் வேலை ரொம்ப ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது, குறிப்பாக திமுகவினர் அங்குள்ள கூலி தொழிலாளிகளான படிக்காத பாமர மக்களை அழைத்துக் கொண்டு சென்னிமலை, திண்டல் முருகன் கோவில், மேட்டூர் டேம் என இரண்டு பஸ் மூணு பஸ் பிடித்து அழைத்துச் செல்கின்றனர். போதாக்குறைக்கு அங்குள்ள மக்கள் அதிமுகவினர் கண்களில் படக்கூடாது என அவர்களை அழைத்துக் கொண்டு சென்று காலையில் குடல் குழம்புடன் இட்லி, மதியம் பிரியாணி, இரவில் ஆட்டுக்கால் பாயாவுடன் டிபன் என கொடுத்து அவர்களுக்கு 500 ரூபாய் பணமும் கொடுத்து வருகிறார்கள் கூலி வேலைக்கு செல்லும் மக்கள் இப்படி ஒரு நாள் கூலி வேலை சென்றால் கூட மூன்று வேலை சாப்பாடு 500 ரூபாய் பணமும் கிடைக்காது என அவர்கள் கூப்பிடும் இடத்துக்கு போய் விடுகின்றனர்.

இதனால் அதிமுகவினர் யாரிடம் சென்று வாக்கு கேட்பது என்ற நிலையிலே இருக்கின்றனர் இது எல்லாம் போதாது என்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொத்தமாக ஒரு கிராம் அளவுள்ள தங்க காசு தயாராகி வருகிறது, இதுவும் ஈரோடு தேர்தலுக்குத் தான் போகும் தேர்தல் நெருங்கும் வேலையில் குறிப்பாக தேர்தல் நடக்கவிருக்கும் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு இந்த ஒரு கிராம் தங்க காசு ஒரு ஓட்டுக்கு ஒன்று என அனைவரிடத்திலும் செல்லும், குறிப்பாக பெண்கள் வாக்குகளை தவிர இந்த ஒரு கிராம் தங்க காசு பெரிதும் உபயோகப்படும் என திமுக தரப்பு எதிர்பார்ப்பதாக சவுக்கு சங்கர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோடு தேர்தலில் முறைகேடு நடக்கிறது என தலைமை தேர்தல் ஆணையர் வரை புகார் அளித்துள்ளார், மேலும் அதிமுக தரப்பினும் புகார் அளிக்கப்பட்டுள்ளது தேர்தல் முறைகேடுகள் காரணமாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் திமுகவின் தேர்தல் பணிகளை மூடி சீல் வைத்தது, இப்படி இருந்தும் முறைகேடுகள் நடப்பது தொடர்வதால் நடத்த என்ன நடக்குமோ என்று கேள்வியும் எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கிறது என!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News