Kathir News
Begin typing your search above and press return to search.

திமுக ஆட்சி குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு!!

திமுக ஆட்சி குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 April 2026 6:45 AM IST

தமிழ்நாட்டில் திமுக அரசின் ஆட்சி மோசமான நிர்வாகத்தால் பின்நோக்கி சென்றுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டினார்.


ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டை பின்நோக்கி கொண்டு சென்றுள்ளதாகக் கூறினார். போதைப் பொருள்களால் இளைஞர் சமூகம் சீரழிந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.


திமுக அரசு 28 ஆயிரம் எஸ்.சி, எஸ்.டி ஊழியர்களின் ஓய்வூதிய பணத்தை கையாடல் செய்துள்ளதாக கோயல் குற்றம் சாட்டினார். ஸ்டாலின் குடும்பத்தினரிடம் இந்த தொகை எங்கு சென்றது என கேள்வி எழுப்பினார். மணல், மது மாஃபியாக்கள் நாட்டை வழிநடத்துகின்றனர் என்றார்.


இந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், உதயநிதியை முதலமைச்சராக்குவார்கள் என சவால் விடுத்தார். ஸ்டாலின் இந்த முறை மீண்டும் முதலமைச்சர் ஆகமாட்டார் என்றார். என்.டி.ஏ. கூட்டணி, நிச்சயம் நாட்டிற்கு நல்லதை ஏற்படுத்தும் என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News