திமுகவினரின் ஆலைகள் சம்பாதிப்பதற்காகவே டாஸ்மாக்:அண்ணாமலை வெளியிட்ட வீடியோ!மார்ச் 17 முற்றுகை போராட்டம்!

சமீபத்தில் டாஸ்மாக் நிறுவனங்களிலும் மது ஆலைகளிலும் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளின் முடிவுகளை அமலாக்கத்துறை அறிக்கையாக வெளியிட்டது இதில் டாஸ்மாக் தொடர்புடைய போக்குவரத்து டென்டரில் கேஒய்சி மற்றும் டிடி தரவுகள் ஒத்துப் போகவில்லை என்றும் பாரின் உரிமங்களை பெறுவதற்காக டென்டரில் ஜிஎஸ்டி பான் நம்பர் இல்லை என்றும் தெரிவித்துள்ளது
மேலும் செலவுகளை ஊதி பெருக்கி ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதும் அமலாக்க துறையின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே டெல்லி மற்றும் சத்தீஸ்கரில் நடந்த மது ஊழலை போன்று தமிழகத்திலும் நடக்கப்போகிறது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார் தமிழகத்தில் நடந்த வருகின்ற டாஸ்மாக் ஊழல் குறித்த கருத்துக்களையும் முன்வைத்துக் கொண்டு வந்தார்
இந்த நிலையில் அவர் கூறியது படியே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதனால் தமிழக பாஜக முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளது
அதாவது டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்துள்ள ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தமிழகத்தை உலுக்கியுள்ளது திமுகவினரின் சாராய ஆலைகள் சம்பாதிப்பதற்காகவே டாஸ்மாக் நடத்தப்படுகிறது இதனால் இந்த ஊழலை கண்டித்து வருகின்ற மார்ச் 17ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் தாளமுத்து நடராஜன் மாளிகையை முற்றுகையிட்டு தமிழக பாஜக போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி ஒரு வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்