கிளாம்பாக்கத்தில் நடந்த கடத்தல்:18 வயது பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை!

கிளாம்பாக்கத்தில் பேருந்திற்காக காத்திருந்த பெண் ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரம் தற்போது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வெளியே 18 வயதான பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்
அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஒரு மனிதர் காவல் கட்டுப்பாட்டறைக்கு தொலைபேசி மூலம் புகார் கொடுத்தால் அந்தப் பெண் மீட்கப்பட்டுள்ளார் இப்படி பாலியல் வன்கொடுமை தமிழகம் முழுவதும் சாதாரணமாக மாறிவிட்டது எளிதில் அணுகக் கூடிய பொருளாகவும் போதைப்பொருள் மாறிவிட்டது மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் என்டிபிஎஸ் வழக்கின் 1122 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அதுமட்டுமின்றி 2021ல் மட்டும் இந்த வழக்கில் 9632 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் கஞ்சா போன்றவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது ஆனால் அதை கடத்தி மற்றும் விற்பனை செய்து வரும் குற்றவாளிகளின் கைது எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது போதைப் பொருள் வியாபாரிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு தான் தமிழ்நாடு அரசு வேண்டுமென்று மெத்தனமாகிவிட்டதா நம் சகோதரிகள் சாலையில் பாதுகாப்பாக நடமாட இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என தனது சமூக வலைதள பக்கத்தில் திமுக அரசுக்கு கேள்வியை முன் வைத்துள்ளார்