Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க ஆளும் கர்நாடகவுக்கு ₹19,920 கோடிகளில் 46 தேசிய நெடுஞ்சாலைகள் - கட்கரி அதிரடி அறிவிப்பு!

பா.ஜ.க ஆளும் கர்நாடகவுக்கு ₹19,920 கோடிகளில் 46 தேசிய நெடுஞ்சாலைகள் - கட்கரி அதிரடி அறிவிப்பு!
X

Mohan RajBy : Mohan Raj

  |  1 March 2022 5:45 PM IST

கர்நாடகாவில் ₹19,930 கோடி ரூபாய் முதலீட்டில் 46 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று (28 பிப்ரவரி, 2022) அடிக்கல் நாட்டினார்.

பெல்காவி கூட்டத்தில் உரையாற்றிய நிதின்கட்காரி பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கர்நாடகாவில் நீடித்த முன்னேற்றம் மற்றும் உயர்வுக்காக உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகள் நெட்வொர்க் மூலம் மாநிலத்தில் மேம்பட்ட தரத்திலான முன்னேற்றத்தை உருவாக்க மோடி அரசு உறுதி எடுத்துள்ளதாக கூறினார்.

மேலும் ₹3,972 கோடி முதலீட்டில் 238 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் கர்நாடகாவில் இருந்து மகாராஷ்டிரம், கோவா வரையிலான மாநிலங்களுக்கிடையேயான சாலை இணைப்பு மேம்படுத்தும் என்றார்.

மேலும் 26 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றிய கட்கரி ரூபாய் 12295 கோடி முதலீட்டில் மொத்தம் 975 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் கிராமங்களிலிருந்து மாவட்ட தலைமைகளுக்கு தடையற்ற பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை செயல்படுத்துவதன் மூலம் மாநில இணைப்பை அதிகரிக்கும் என்றார்.

மேலும் மங்களூருவில் ₹3,173 கோடி மதிப்பிலான 15 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தொடக்க விழா அடிக்கல் நாட்டினார் மொத்தம் 165 கிலோ மீட்டர் நீளமுள்ள திட்டங்கள் பா.ஜ.க ஆளும் கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தப்பட உள்ளன.

Source - Swarajya.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News