Kathir News
Begin typing your search above and press return to search.

'கே.ஜே.எஃப் 2' குழுவை வாழ்த்திய 'பீஸ்ட்' இயக்குனர் நெல்சன் திலிப்குமார்

கே.ஜே.எஃப் 2 குழுவை வாழ்த்திய பீஸ்ட் இயக்குனர் நெல்சன் திலிப்குமார்

Mohan RajBy : Mohan Raj

  |  29 March 2022 8:45 AM GMT

'கே.ஜி.எஃப் 2' படக்குழுவை வாழ்த்தியுள்ளார் இயக்குனர் 'பீஸ்ட்' இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.




நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிக்க 'பீஸ்ட்' படத்தை இயக்கி வரும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் 'கே.ஜி.எஃப் 2' படத்தை வாழ்த்தியுள்ளார். வரும் ஏப்ரல் 13'ஆம் தேதியன்று 'பீஸ்ட்' படம் வெளியாகவிருக்கிறது, அதே நாளில் 'கே.ஜி.எப் 2' படமும் வெளியாகவிருக்கிறது. தென்னிந்திய அளவில் இந்த இரு படங்களும் பெரிய படங்கள் 'கே.ஜி.எஃப் 2' முதல் பாகம் ஏற்கனவே வந்து வெற்றியடைந்துள்ளதால் 'கே.ஜி.எப் 2' பிரம்மாண்டமாக இரண்டாம் பாகமாக தயாராகியுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் 'கே.ஜி.எப் 2' படமா அல்லது 'பீஸ்ட்' படமா என்ற போட்டி கருத்துக்கள் நிலவி வந்த நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காரியம் ஒன்றை செய்துள்ளார்.




நேற்று வெளியான 'கே.ஜி.எப் 2' படத்தின் டிரைலர் குறித்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார், 'பிரம்மாண்டமாகவும், தீயாகவும் கே.ஜி.எஃப்'2 ட்ரெய்லழ் உள்ளது' என அவர் பாராட்டியுள்ளார். இதனையடுத்து இரு தரப்பு ரசிகர்களும் இரு படங்களின் வெளியீட்டை ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News