Kathir News
Begin typing your search above and press return to search.

"ஏழு ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 200 சிலைகள் மீட்பு" - பெருமிதம் பொங்க கூறிய மோடி

ஏழு ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 200 சிலைகள் மீட்பு - பெருமிதம் பொங்க கூறிய மோடி
X

Mohan RajBy : Mohan Raj

  |  27 Feb 2022 10:45 PM IST

கடந்த 7 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 200 சிலைகளை மீட்டுள்ளதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடி மாதத்தின் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமையும் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று நாட்டு மக்களிடையே மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் கூறியதாவது, "இம்மாத தொடக்கத்தில் இத்தாலியிலிருந்து விலைமதிப்பற்ற சிலைகள் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது அதில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க சிலையும் ஒன்று, இந்த சிலை பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள குண்டல்பூர் கோவிலில் இருந்து திருடப்பட்டது. அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் வேலூரில் ஆஞ்சநேயர் சிலைகள் திருடப்பட்டன இந்த சிலை 600 முதல் 700 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்தது இந்த மாதத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து நமது தூதரகம் இந்த சிலையை மீட்டது" எனக் கூறினார்.


மேலும் அவர் கூறியதாவது, "கடந்த 2013 ஆம் ஆண்டு வரை 13 சிலைகள் மட்டுமே இந்தியா கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் இருநூறுக்கும் மேற்பட்ட சிலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஹாலந்து, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சிலைகளை மீட்க உதவி செய்கின்றன என்றார்.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News