நாகர்கோவில்: 2000 சிறுபான்மையினர் பா.ஜ.க.வில் இணைந்தனர்!
உலகளவில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உள்ளது. 18 கோடிக்கும் மேற்பட்டோர்கள் இந்த கட்சியில் உள்ளனர்.
By : Thangavelu
பாஜகவில் சிறுபான்மையினர் இணையும் விழா நேற்று (ஜனவரி 2) நாகர்கோவிலில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் காந்தி, நயினார் நாகேந்திரன் உள்நாட்டு மீனவர் சங்க தலைவர் சகாயம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹீம் வாழ்த்துரை வழங்கினார். இதில் பாஜக தலைவர் கே.அண்ணாமலை முன்பாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
2/1/22இன்று மாலை5.00மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் முதன் முதலில் நாகர்கோவில் உடுப்பி ஹோட்டல் நிகழ்ச்சியில் பாரதியஜனதா கட்சியில் அன்புத்தம்பி சகாயம் அவர்கள் தலைமையில் 2000க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் இணைப்பு விழாவில் மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் , pic.twitter.com/7R1P3fb1IZ
— Nainar Nagenthiran (@NainarBJP) January 2, 2022
இதன் பின்னர் பாஜக தலைவர் கே.அண்ணாமலை பேசியதாவது: உலகளவில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உள்ளது. 18 கோடிக்கும் மேற்பட்டோர்கள் இந்த கட்சியில் உள்ளனர். பாஜகவை பொறுத்தவரையில் 8 முக்கிய கொள்கைகள் உள்ளன. அதில் முக்கியமான மூன்றாவது கொள்கையாக மதசார்பற்ற அரசை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டிருக்கோம். எந்த கட்சியும் இதனை போடவில்லை. பாஜக மட்டுமே போட்டுள்ளது என்றார்.
இன்று நாகர்கோவில் உடுப்பி ஹோட்டலில் வைத்து பாரதிய ஜனதா கட்சியில் திரு.சகாயம் அவர்கள் ஏற்பாட்டில் சிறுபான்மையினர் இணைப்பு விழாவில் மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்களுடன் கலந்து கொண்டேன்.@NainarBJP @syedibrahimbabl pic.twitter.com/nfLnVHwmCk
— M R Gandhi (@MRGandhiNGL) January 2, 2022
மேலும், சுதந்திரத்திற்கு பின்னர் காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் என்று காந்தி சொன்னார். ஆனால் காந்தியின் பேச்சை நிராகரித்து விட்டு மதவாத இயக்கமாக காங்கிரஸ் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பாஜக மதசார்பற்ற அரசு கொண்டு வருகின்ற நோக்கம் கொண்ட கட்சி ஆகும். இந்துத்துவா வாழ்வியல் முறை, மதத்தை சார்ந்தது கிடையாது.
20 வருடங்களுக்கு பின்னர் நமது நாட்டின் பிரதமர் போப் பிரான்சிசை சந்தித்து 60 நிமிடம் பேசியிருக்கிறார். ஏற்கனவே பிரதமர் மோடிக்கு முன்னர் போப் ஜான்பாலை சந்தித்தது அன்றை பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகும். சுமார் 75 ஆண்டுகளாக மீன்வள அமைச்சகம் என்று ஒன்று இல்லாமல் இருந்தது. ஆனால் பிரதமர் மோடி மீன்வளத்துறையை உருவாக்கி அதில் தமிழகத்தை சேர்ந்த எல்.முருகனை அமைச்சராக நியமித்துள்ளார். மீனவருக்கு 4500 ரூபாய் வங்கி கணக்கில் பிரதமர் செலுத்துகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
Source, Image Courtesy: Twiter