திமுக அமைச்சரின் 2000 கோடி ஊழல்! அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை... சிக்கிய அந்த அமைச்சர் யார்?
By : Mohan Raj
காசு காசு எல்லாத்துலையும் காசு..! 2000 கோடி ஊழல்... அடுத்த திமுக அமைச்சருக்கு குறி வைத்து அண்ணாமலை வீசிய புகார்....
தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆட்சியில் நடக்கும் அவலங்களை அண்ணாமலை வெளிச்சம் போட்டு கட்டிவருகிறார், குறிப்பாக திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவர் மீது அண்ணாமலை அவர்கள் துறையில் நடக்கும் முறைகேடுகள், அவர்கள் துறையில் நடக்கும் ஊழல்கள், இதில் அமைச்சர்களுக்கு செல்லும் பங்கு என்பது போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இவை எல்லாவற்றிற்கும் திமுகவினர் ஆதாரம் இருக்கிறதா? என கேட்டு சமாளித்தாலும் இந்த குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகிறது, மேலும் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது அண்ணாமலை வைத்த குற்றசாட்டிற்கு இப்படித்தான் திமுகவினர் ஆதாரம் இருக்கிறதா என கேட்டார்கள், ஆனால் அதன் பிறகு அண்ணாமலை தொடர் ஆதாரங்களை எடுத்துக் கொடுக்க விவகாரமே மாறிப்போனது.
அதேபோல் தற்பொழுது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஊழல்களை அண்ணாமலை பட்டியலிட்டுள்ளார், கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய்க்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்திருக்கிறார் ஊழல் என அண்ணாமலை தகவல் தகவலாக எடுத்துக்கூறியுள்ளது தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'என் மண் என் மக்கள்' யாத்திரை தற்பொழுது அரியலூர் மாவட்டத்தில் நடந்து வருகிறது, இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் யாத்திரையின் சமயத்தில் பேசிய அண்ணாமலை அம்மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்து துறையின் அமைச்சர் சிவசங்கர் மீது பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
அண்ணாமலை பேசும் பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜியின் இடத்தை சிவசங்கர் பிடித்து விட்டார் எனக் கூறியுள்ளார். மேலும் 'தகுதியற்ற போலி நிறுவனங்கள் மூலம் 1276 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளார், போக்குவரத்து துறைக்கு கருவிகள் வாங்குகிறேன் என வேக கட்டுப்பாட்டு கருவி, மாசு கட்டுப்பாட்டு கருவி போன்ற கருவிகள் வாங்குவது மூலமாக கமிஷன் அடித்து 783 கோடி ஊழல் செய்துள்ளார். மொத்தம் 2000 கோடி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஊழல் செய்துள்ளது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் சிவசங்கர் மனைவி வைத்திருக்கும் செயற்கை கருத்தரிப்பு மையத்தின் விளம்பரத்தை போக்குவரத்து துறையில் பயன்படுத்தி அவரது மனைவியின் வியாபாரத்திற்கு மறைமுகமாக அமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உதவுகிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இப்படி அமைச்சர் சிவசங்கர் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறிய அண்ணாமலை அடுத்தபடியாக ஒரு சில விஷயங்களையும் கூறினார். 'தொலைதூர பயணம் செல்லும் அரசு பேருந்துகள் எந்தெந்த உணவகத்தில் நிற்க வேண்டும்! எந்தெந்த கட்டண கழிப்பிடங்களில் நிற்க வேண்டும் என்பது போன்ற முடிவுகளை அந்த உணவகங்களில் காசு வாங்கிக் கொண்டுதான் அமைச்சர் சிவசங்கர் செய்கிறார் என்பது போன்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இப்படி திமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை என்கின்ற முக்கிய துறையை கையாளும் அமைச்சர் சிவசங்கர் மீது அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டு தற்போது அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அண்ணாமலை ஆவின், சத்துணவு மூட்டைகளில் செய்யப்பட்ட முறைகேடுகள் போன்றவற்றை குறி வைத்து புகார்கள் எழுப்பிய நிலையில் இப்பொழுது போக்குவரத்து துறை அமைச்சர் மீது 2000 கோடி ரூபாய் புகார் தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த புகார் இத்துடன் நிற்குமா அல்லது அமலாக்கத்துறை போன்ற நடவடிக்கைகளுக்கு மாறுமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது..
இப்படி 2000 கோடி ரூபாய் ஊழல் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மீது அண்ணாமலை வைத்துள்ள குற்றச்சாட்டிற்கு இதுவரை அமைச்சர் சிவசங்கர் தரப்பிலிருந்து எந்த ஒரு விதமான மறுப்போ விளக்கமோ வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.