மறக்க முடியுமா 2008 மழை வெள்ளத்தை? அன்று மக்களை கருணாநிதி தத்தளிக்கவிட்டார், இன்று அவர் மகன் ஸ்டாலின் !

கடந்த 2008 அக்டோபரில் பேய் மழை பெய்து தமிழகமே குறிப்பாக சென்னை தத்தளித்ததை யாராலும் மறக்க முடியாது, அப்பொழுதும் தி.மு.க ஆட்சிதான் இருந்தது தற்பொழுதைய மழை வெள்ளத்தில் மக்களை தவிக்கவிட்டது போல் 2008'ம் ஆண்டும் தவிக்க விட்டது அது பற்றிய ஓர் பார்வை.
கடந்த 2008'ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. அப்பொழுது ஆட்சியில் முதல்வராக இருந்த மறைந்த மு.கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், "இதுவரை கிடைத்த சேத நிலவரப்படி, மொத்தம் 103 பேர் மழைக்கு பலியாகியுள்ளனர். 450 கால்நடைகளும் பலியாகியுள்ளன. 50 ஆயிரத்து 890 வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலும் குடிசைகளே அதிகம். 6700 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. 687 பாலங்கள், 402 அரசுக் கட்டடங்கள் மழையால் சேதமடைந்துள்ளன.
கன மழை காரணமாக 5 லட்சத்து 22 ஆயிரத்து 290 ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. 7 லட்சம் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்" எனக்குறிப்பிட்டுள்ளார். அந்தளவிற்கு மழை வெள்ளம் தமிழகத்தை குறிப்பாக சென்னையை புரட்டி போட்டது. சென்னையில் பல இடங்களில் நீர் சூழ்ந்து மக்கள் ஒதுங்க கூட இடமின்றி வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்கள் தேடி அலையும் பரிதாப நிலை ஏற்பட்டது.
குறிப்பாக சென்னையில் சைதாப்பேட்டை தொடங்கி வேளச்சேரி வரை நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தோடியது, மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் பெருமளவு வெள்ள நீர் சூழ்ந்தது. மக்கள் வீடுகளை விட்டு வெறியேறும் அளவிற்கு தண்ணீர்க்காடாக மாறியது அப்பகுதிகள். அந்த நாட்களில் சென்னையில் பல பகுதிகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.
அன்றும் மழைக்கு தற்பொழுது போல் தி.மு.க அரசின் முதல்வர், மந்திரிகள், எம்.எல்.ஏ'க்கள் வடிகால்களை வடிய வைப்பது போன்றும், சாம்பார் சாதம் மக்களுக்கு வழங்குவது போன்றும், சாக்கடை அடைப்பை சுத்தம் செய்யும் இடத்தில் நின்று புகைப்படம் எடுப்பது போன்றும் தங்கள் பணிகளை செவ்வனே செய்தனர். தற்பொழுது கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்தும் அதே போல் பேரிடர் நிலை வரும்போது இப்பொழுதும் புகைப்படங்கள் எடுக்கின்றனர், உணவுகள் பரிமாறப்படுகின்றன ஆனால் தீர்வுதான் கிடைத்தபாடில்லை. இவ்வளவிற்கும் அப்பொழுது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியிடம் மிகுந்த இணக்கத்துடன் இருந்தார் கருணாநிதி அதை வைத்து மத்திய மந்திரி சபையில் தன் வாரிசுகளுக்கு இடங்களை வாங்கினாரே தவிர சென்னை மக்களை தண்ணீரில்தான் தவிக்க விட்டார், தற்பொழுது அதன் அடுத்த வெர்ஷனாக மகன் மு.க.ஸ்டாலின் செனைன மக்களை தண்ணீரில் தவிக்க வைத்து உதவுவதுபோல புகைப்படங்கள் எடுத்து பரப்பிகொண்டிருக்கிறார்.
இதற்கு தீர்வு?